ஆட்கின்சு உணவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆட்கின்சு உணவு

ஆட்கின்சு உணவு (atkins diet) என்பது உடல் எடையைக் குறைப்பதற்கென மேலைநாடுகளில் பிரபலமான, குறைவான கார்போஹைட்ரேட் கொண்ட ஓர் உணவு முறை. இம் முறையை அமெரிக்க மருத்துவக் குழுமத்தின் ஆய்வு இதழில் வெளிவந்த ஓர் அறிக்கையின் அடிப்படையில் இராபர்ட் ஆட்கின்ஸ் என்பவர் முன்மொழிந்தார்.

கார்போஹைட்ரேட்டுகளைக் குறைவாக உண்ணுவதன் மூலம் மனித உடல் குளுக்கோசை விட்டு விட்டுக் கொழுப்பை எரிபொருளாகப் பயன்படுத்தும் என்பதே இந்த உணவு முறையின் அடிப்படை தத்துவம்.

ஆட்கின்ஸ் உணவு முறையில் நான்கு நிலைகள் உள்ளன. முதலாவது நிலையான தூண்டுதல் நிலையில் கீட்டோன் உருவாக்கும் உணவு (ketogenic diet) பயன்படுத்தப்படுகிறது. உடலில் குளுக்கோசு இல்லாத போது கீட்டோன்கள் கிரெப் சுழற்சி மூலம் ஆற்றலைத் தரவல்லவை. இதற்கு இன்சுலின் தேவை இல்லை. இவ்வாறான கீட்டோன் மிகை நிலை உடலில் பல ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதையடுத்து நிகழும் பல உயிர் வேதியியல் மாற்றங்களால் மனித உடல் கொழுப்பில் இருந்தே பெரும்பாலும் ஆற்றலை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.

வெளியிணைப்பு[தொகு]

ஆட்கின்சு நிறுவனத்தின் இணையத் தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்கின்சு_உணவு&oldid=2745198" இருந்து மீள்விக்கப்பட்டது