உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிரியர்களது பணிச் சேவை மற்றும் மாணவர்களுக்கு சிறப்பாகக் கற்பிக்கும் முறையினைப் பாராட்டி ஆசிரியர் விருது வழங்கப்படுகின்றன. பல அமைப்புகளும் பல நாட்டு அரசுகளும் இந்த விருதுகளை வழங்குகின்றன.

அமெரிக்கா

[தொகு]

1952 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதன்மை மாநில பள்ளி அதிகாரிகள் மன்றத் (CCSSO) திட்டமாக தேசிய ஆசிரியர் திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலப் பள்ளிகளிலிருந்தும் தேர்வுக் குழுவால் விருதுபெற ஆசிரியர் தேர்வு செய்யப்படுகிறார்.

டிஸ்னிஹேண்ட் ஆசிரியர் விருது, பல ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.விருதுடன் அவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது.[1]

நேஷனல் டீச்சர்ஸ் ஹால் ஆஃப் ஃபேம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஐந்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். சூன் 1992 இல் முதல் விருது விழா நடைபெற்றது. எம்போரியா ஸ்டேட் யுனிவர்சிட்டி வளாகத்தில் அமைந்துள்ள ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வான ஆசிரியர்களின் நிகழ்படம் இடம்பெறும்.

ஐக்கிய இராச்சியம்

[தொகு]

ஆசிரியர் விருதுகள் அறக்கட்டளை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்குகிறது.

ஜெர்மனி

[தொகு]

2009 முதல் ஜெர்மனியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித் திட்டங்களுக்கு ஜெர்மனி ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.[1] இது வோடபோன் அறக்கட்டளை மற்றும் ஜெர்மன் மொழியியல் சங்கம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு,ஏற்பாடு செய்யப்பட்டது [2][3] இந்த விருதானது பெர்லினில் உள்ள மனித மேம்பாட்டுக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் சர்வதேச மாணவர் மதிப்பீடு (PISA) ஆய்வுக்கான நிகழ்ச்சியை நடத்தியவரான பேராசிரியர் முனைவர் ஜூர்கன் பாமெர்ட் [4] மற்றும்ஜெர்மன் அரசியல்வாதி, அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் போன்றவர்களால் ஆதரிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை இந்த விருதிற்குப் பரிந்துரைக்கலாம். பேராசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மாணவர் தலைவர்களின் நடுவர் மன்றம் ஆகியோர் இணைந்து ஜெர்மனியின் அந்த ஆண்டின் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும்.

சான்றுகள்

[தொகு]
  1. German teachers award website
  2. Vodafone Foundation Germany-co-founder of the German teacher award பரணிடப்பட்டது 2012-06-09 at the வந்தவழி இயந்திரம்
  3. German philological association
  4. Official Lehrerpreis website showing Prof. Dr. Jürgen Baumert as a jury member and advisor
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிரியர்_விருது&oldid=3598200" இலிருந்து மீள்விக்கப்பட்டது