உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்கின்களின் அடிப்படை அமைப்பான இன்டோல்-3-அசிட்டிக் அமிலம்

ஆக்சின்கள் (Auxins) தாவர வளரூக்கிகளில் ஒரு வகை. இவை செடிகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. ஆக்சின்கள் பற்றி முன்மொழிந்தவர் டச்சு அறிவியலாளர் ஃபிரிட்ஸ் வென்ட் என்வர். ஆக்சினின் வேதியியல் பண்பை ஆராய்ந்து அவை இன்டோல்-3-அசிட்டிக் அமிலம் தான் என்று கென்னத். வி. திமேன் கூறினார்.

ஆக்சின்கள் தாவர செல்களில் உள்ள குறிப்பிட்ட ஜீன்களைத் தூண்டி தாவர வளர்ச்சிக்கான புரத உற்பத்தியைத் தூண்டுகின்றன. இளநீரில் ஆக்சின்கள் உட்பட பல செடி வளரூக்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yong, Jean W. H.; Ge, Liya; Ng, Yan Fei; Tan, Swee Ngin. 2009. "The Chemical Composition and Biological Properties of Coconut (Cocos nucifera L.) Water." Molecules 14, no. 12: 5144-5164.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சின்&oldid=2221033" இலிருந்து மீள்விக்கப்பட்டது