ஆக்கிலூபேட்டர்
Jump to navigation
Jump to search
ஆக்கிலூபேட்டர் புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம் | |
---|---|
![]() | |
ஆக்கிலூபேட்டர் ஜைஜண்டிகஸ் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | சோரோப்சிடா |
பெருவரிசை: | தொன்மா |
வரிசை: | சோரிஸ்ச்சியா |
துணைவரிசை: | தேரோப்போடா |
குடும்பம்: | டிரோமியோசோரிடீ |
பேரினம்: | ஆக்கிலூபேட்டர் பேர்லே, நோரெல், & கிளார்க், 1999 |
இனங்கள் | |
|
ஆக்கிலூபேட்டர் (உச்சரிப்பு /əˌkɪloʊˈbeɪtɔr/; "ஆக்கைல்ஸ்' போராளி/வீரன்") என்பது, டிரோமியோசோரிட் தேரோபோட் தொன்மா என்னும் பேரினத்தைச் சேர்ந்தது. இது தற்போதைய மங்கோலியாவின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. இது ஒரு இருகாலி, இரைகொல்லியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் பின் காலில் உள்ள இரண்டாம் விரலின் அரிவாள் வடிவிலான நகங்களைப் பயன்படுத்தி இது இரைகளை வேட்டையாடும். இது ஒரு பெரிய டிரோமியோசோரிட் ஆகும். இதன் நீண்ட மூக்கிலிருந்து வால் வரையான நீளம் 15 தொடக்கம் 20 அடிகள் வரை இருக்கும்.
இதன் பொதுப் பெயர் டிரோஜான் போரின் கிரேக்க வீரனான ஆக்கைல்ஸ் என்பவனுடைய பெயரும், போராளி அல்லது வீரன் எனப் பொருள்படும் மங்கோலியச் சொல்லான பேட்டர் என்பதும் சேர்ந்து உருவானது.