அ. மா. சாமி
அ. மா. சாமி (மே 7, 1935 – அக்டோபர் 8, 2020) என்று அறியப்படும் அருணாசலம் மாரிசாமி தமிழக எழுத்தாளரும், இதழாளரும், நூலாசிரியரும் ஆவார். ராணி வார இதழின் ஆசிரியர் பொறுப்பில் 44 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். தினத்தந்தி நிறுவனத்தில் செய்தியாளராகத் தம் பணியைத் தொடங்கினார். ராணி முத்து இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.[1] குறும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் என்கிற புனைப்பெயர்களில் ஏராளமான சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.[2]
பிறப்பும் படிப்பும்
[தொகு]முகவை மாவட்டத்தில் கோப்பை நாயக்கன்பட்டியில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளி இறுதி வரை கல்வி பயின்றார். சொந்த முயற்சியில் தமிழ் இலக்கியங்களையும் நூல்களையும் கற்றார்.
படைப்புகள்
[தொகு]சிறுகதைகள், நெடுங்கதைகள், சிறுவர் கதைகள், பயண நூல்கள், இதழியல், வாழ்க்கை வரலாறு எனப் பல வகை நூல்களை அ .மா சாமி எழுதியுள்ளார். குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் என்னும் புனைபெயர்களில் கதைகள், சிறுகதைகள் எழுதினார். தினத்தந்தி நாளிதழில் நீண்டகாலம் தொடராக வந்த கன்னித்தீவு படக்கதை இவரது படைப்பே ஆகும்.[3]
- தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி
- திருக்குறள் புதிய உரை
குரும்பூர் குப்புசாமி என்ற பெயரில் எழுதியவை
[தொகு]- கதை
- தீபா
மறைவு
[தொகு]அ.மா.சாமி தமது 85-வது அகவையில் சென்னை அண்ணா நகர் சிந்தாமணி அருகே உள்ள அவரது மகன் மாறன் இல்லத்தில் 2020 அக்டோபர் 8 இல் காலமானார்.[1][4]
எழுதிய முக்கிய நூல்கள்
[தொகு]- ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை (2014)
- சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம் (2013)
- தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி (1987)
- திராவிட இயக்க இதழ்கள்
- நாம் தமிழர் இயக்கம்
- வரலாறு படைத்த தினத்தந்தி
- திருக்குறள் செம்பதிப்பு
- தமிழ் இதழ்கள் வரலாறு
- இந்திய விடுதலைப் போர் செந்தமிழ் தந்த சீர்
- இந்து சமய இதழ்கள்
- தமிழ் இசுலாமிய இதழ்கள்
- தமிழ் கிறித்தவ இதழ்கள்
- 19 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்
விருதுகள்
[தொகு]- மூத்த இதழாளர் விருது (தமிழ் நாடு அரசு)[சான்று தேவை]
- பெரியார் விருது (முதல்வர் கருணாநிதி)
- சிறந்த இதழாளர் விருது (சென்னைப் பல்கலைக் கழகம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 'ராணி' அ.மா.சாமி மறைந்தாரே![தொடர்பிழந்த இணைப்பு], விடுதலை, அக்டோபர் 9, 2020
- ↑ மறைந்தார் அ.மா.சாமி! எழுத்து உலகுக்குப் பேரிழப்பு என வை.கோ. இரங்கல்
- ↑ "அ.மா.சாமி: கன்னித்தீவு நாயகர்", Hindu Tamil Thisai, 2020-10-10, பார்க்கப்பட்ட நாள் 2024-06-22
- ↑ "முதுபெரும் பத்திரிகையாளர்,இதழியல் வரலாற்று நூல்களின் ஆசிரியர் அ.மா.சாமி மறைவு", Aram Online (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-06-22
வெளி இணைப்புகள்
[தொகு]- இருண்ட வரலாறு ஒளி பெற்றது! பரணிடப்பட்டது 2017-04-22 at the வந்தவழி இயந்திரம்