அ. சி. முத்தையா

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

அ. சி. முத்தையா என்னும் அண்ணாமலை சிதம்பரம் முத்தையா (A. C. Muthiah பிறப்பு 1940) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவிய அண்ணாமலை செட்டியாரின் மகன் வழிப் பேரன் ஆவார். தொழிலதிபர் எம். ஏ. சிதம்பரத்தின் மகன் ஆவார். ஸ்பிக் நிறுவனத்தின் தலைவர், 1999 முதல் 2001 வரை இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்தார்.

வாழ்க்கையும் கல்வியும்[edit]

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டத்தையும், டெட்ராய்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை நிர்வாகவியல் பட்டத்தையும் (எம்.பி.ஏ) பெற்றவர்.

பணிகள்[edit]

வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் பிரதமருக்கு ஆலோசனை கூறும் குழுவின் உறுப்பினர், தென்னிந்தியத் தொழில் வர்த்தக அவையின் தலைவர். சர்வதேசத் தொழில் வர்த்தக அமைப்புகளின் இந்திய தேசியக் குழுவின் துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளில் இருந்துள்ளார். சென்னை மேதமேடிகல் இன்ஸ்ட்டியூட், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவியுள்ளார்.

குடும்பம்[edit]

மனைவி பெயர் தேவகி. மகன் பெயர் அஸ்வின் முத்தையா. இரண்டு மகள்கள். முன்னாள் இந்திய நடுவண் நிதியமைச்சர் ப. சிதம்பரம் இவரது மைத்துனராவார்.

விருதுகள்[edit]

பெல்ஜியம் அரசரின் நைட் விருதைப் பெற்றுள்ளார்.[1],

மேற்கோள்கள்[edit]

  1. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்38