அ. இராதிகா சுரேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. இராதிகா சுரேசு
A. Radhika Suresh
முழுப்பெயர்அம்பிகா இராதிகா சுரேசு
தேசியம் இந்தியா
பதக்கத் தகவல்கள்
பெண்கள் மேசைப்பந்தாட்டம்
நாடு  இந்தியா
பொதுநலவாய மேசைபந்தாட்டப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1991 நைரோபி அணி
தெற்காசியப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1991 கொழும்பு ஒற்றையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1991 கொழும்பு இரட்டையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1991 கொழும்பு அணி
தங்கப் பதக்கம் – முதலிடம் 1991 டாக்கா ஒற்றையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1991 டாக்கா இரட்டையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1991 டாக்கா அணி

  அ. இராதிகா சுரேசு (A. Radhika Suresh) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மேசைப் பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். ஓர் ஒலிம்பியன் ஆகவும் முன்னாள் தேசிய வெற்றியாளராகவும் இவர் அறியப்படுகிறார்.

குடும்பம்[தொகு]

இராதிகா சுரேசு மேசைப்பந்து வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை கே.ஆர்.பிள்ளை தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முன்னாள் மேசைப்பந்து வெற்ரியாளர் ஆவார், மேலும் இவரது மூத்த சகோதரர் ஆர். இராசேசும் முன்னாள் மாநில மேசைப்பந்து வெற்றியாளர் ஆவார். [1]

சாதனைகள்[தொகு]

இவரது சாதனைகள் பின்வருமாறு. [1]

மாநிலம்[தொகு]

  • 10 வயதில் கேரள மாநில இளையோர் மேசைப்பந்து வீரர் பட்டத்தை வென்றார்.

தேசிய அளவு[தொகு]

  • 1986 ஆம் ஆண்டில் முசாபர்பூரில் தேசிய இளைய இளையோர் பட்டத்தை வென்றார்
  • 1989 ஆம் ஆண்டில் இந்தூரில் தேசிய இளையோர் பட்டத்தை வென்றார்
  • 1995 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரியில் நடந்த தேசிய மகளிர் பட்டத்தை வென்றார்
  • 2015 ஆம் ஆண்டில் கொச்சியில் உள்ள இராசீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 22ஆவது தேசிய மூத்த வீரர்களின் மேசைபந்து போட்டியின் வெற்றியாளராக பெண்கள் ஒற்றையர் பட்டம் [2]

பன்னாட்டு அளவு[தொகு]

  • 1991, 1993 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் உலக வெற்றியாளர்
  • 1991, 1993 மற்றும் 1995 இல் காமன்வெல்த் வெற்றியாளர்
  • 1990, 1992 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் ஆசிய மேசைப்பந்து வெற்றியாளர்
  • 1996 அட்லாண்டா ஒலிம்பிக் மேசைப்பந்து போட்டியில் பங்கேற்பு
  • 1991 நைரோபி காமன்வெல்த் மேசைபந்து போட்டியில் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்தார்.
  • 1991 கொழும்பு மற்றும் 1993 டாக்கா தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுகளில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு நிகழ்வுகளை வென்றதன் மூலம் மூன்று தங்கப் பதக்கங்களையும் வென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இந்திய எண்ணெய் நிறுவனத்தில் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை நிர்வாகியாக பணியாற்றினார். [1] கடவந்திரா ஒய்எம்சிஏவில் ஓர் அகாடமியையும் நடத்தி வருகிறார். [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Radhika Suresh::Kerala Table Tennis Association". ktta.in. Archived from the original on 24 October 2016. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016."Radhika Suresh::Kerala Table Tennis Association". ktta.in. Archived from the original on 24 October 2016. Retrieved 26 September 2016.
  2. "Arup, Ambika triumph". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
  3. "Radhika tastes success as coach". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
  4. "Then an Aggressive Player, Now a Patient Coach - The New Indian Express". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._இராதிகா_சுரேசு&oldid=3757432" இலிருந்து மீள்விக்கப்பட்டது