அஸ்வினி பைதே-தேஷ்பாண்டே
விதூசி அஸ்வினி பைதே-தேஷ்பாண்டே | |
---|---|
ஒடிசாவின் புவனேசுவரத்தில் நடந்த ராஜாரணி இசை விழா -2016இல் அஸ்வினி பைதே-தேஷ்பாண்டே நிகழ்ச்சி | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | அஸ்வினி கோவிந்த் பைதே |
பிறப்பு | 7 அக்டோபர் 1960 |
பிறப்பிடம் | மும்பை, இந்தியா |
இசை வடிவங்கள் | கயால், பஜனைகள், தும்ரிகள் |
தொழில்(கள்) | இந்துஸ்தானி இசைப் பாடகர் |
இசைக்கருவி(கள்) | பாடுதல் |
இசைத்துறையில் | 1980–தற்போது வரை |
இணையதளம் | http://www.ashwinibhide.in |
விதூசி அஸ்வினி பைதே-தேஷ்பாண்டே (Ashwini Bhide-Deshpande) (பிறப்பு: அக்டோபர் 7, 1960) மும்பையைச் சேர்ந்த இந்துஸ்தானி இசை பாடகராவார். இவர் ஜெய்ப்பூர்-அட்ரௌலி கரானா பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.
ஆரம்பகால வாழ்க்கையும் பயிற்சியும்
[தொகு]வலுவான இசை மரபுகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் மும்பையில் பிறந்த அஸ்வினி தனது ஆரம்பகால பயிற்சியை நாராயணராவ் தாதர் என்பவரின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கினார். புதில்லி காந்தர்வ மகாவித்யாலயத்திலிருந்து தனது இசை விஷாரத்தை முடித்தார். அப்போதிருந்து, இவர் ஜெய்ப்பூர்-அட்ரௌலி பாணியில் தனது தாயார் மானிக் பைதேவிடம் இசையைக் கற்றுக் கொண்டார். அஸ்வினி இரத்னாகர் பாயிடமிருந்து 2009இல் இறக்கும் வரை வழிகாட்டுதலையும் பெற்றார்.
நுண்ணுயிரியலில் முதுகலை பட்டம் பெற்ற இவர் மும்பையில்] அமைந்துள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து உயிர்வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அகில பாரதிய கந்தர்வ மகாவித்யாலய வாரியத்திலிருந்து இசை விசாரத் பட்டமும், இசையில் முதுகலை பட்டம் பெற்றார்.
நிகழ்த்தும் தொழில்
[தொகு]தனது முனைவர் ஆராய்ச்சியை முடிக்கும் வரையில் இசையில் தொழில்முறை வாழ்க்கையைத் தொடரும் எண்ணம் இவருக்கில்லை. பின்னர், சஞ்சீவ் அபயங்கருடன் இவரது 'ஜஸ்ராங்கி ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சிகள்' பார்வையாளர்களிடமிருந்து கலவையான வரவேற்பைப் பெற்றது. [1] தொராண்டோவின் ராக்-மாலா இசைச் சங்கத்துக்காக 2019ஆம் ஆண்டில் கனடாவின் தொராண்டோவிலுள்ள ஆகா கான் அருங்காட்சியகம் உட்பட உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற இடங்களில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [2]
வெளியீடுகள்
[தொகு]Publications
[தொகு]- Ragarachananjali (Rajhansa Prakashan; 2004) - Book and CD of self composed bandishes
- Ragarachananjali 2 (Rajhansa Prakashan; 2010) - Book and CD of self composed bandishes
- Madam Curie - मादाम क्युरी (2015) - Marathi translation of Eve Curie's biography of Marie Curie.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "‘One should not take liberty in the name of novelty’". https://www.thehindu.com/features/friday-review/%E2%80%98One-should-not-take-liberty-in-the-name-of-novelty%E2%80%99/article16442870.ece.
- ↑ "Ashwini Bhide Deshpande at the Aga Khan Museum (April 27, 2019)". Aga Khan Museum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.
- ↑ https://www.mid-day.com/articles/book-on-physicist-marie-curie-now-translated-in-marathi/16175193
வெளி இணைப்புகள்
[தொகு]- Ashwini Bhide-Deshpande's Website பரணிடப்பட்டது 2021-03-09 at the வந்தவழி இயந்திரம்
- Structure and balance பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- The Jaipur gharana (includes sound samples)