அஸ்டாரர்
![]() | |
வெளியீட்டாளர் | ஹருதுயன் ஷிமாவோன்யன் |
---|---|
ஆசிரியர் | ஹருதுன் ஷிமாவோன்யன் |
நிறுவியது | 16, அக்டோபர் 1794 |
மொழி | அருமேனிய மொழி |
தலைமையகம் | பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணம், மதராசு |
அஸ்டாரர் (Azdarar ( ஆர்மீனியம்: Ազդարար ) ( மேற்கு ஆர்மீனிய மொழியில் அஸ்டாரர் என உச்சரிக்கப்படுகிறது) என்பது முதல் அருமேனிய மொழி செய்தித்தாள் ஆகும். இது அக்டோபர் 16, 1794 அன்று இந்தியாவில் மதராஸ் நகரில் (இப்போது சென்னை ) கிருத்துவ சமய போதகரான ஹருதுயன் ஷிமாவோன்யனால் துவக்கப்பட்டது.[1][2][3] இது இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் ஆங்கிலம் அல்லாத செய்தித்தாள் ஆகும்.[4] மாதாந்திர இதழான இதில் முக்கியமாக கலாச்சார மற்றும் வரலாற்று சிக்கல்களை உள்ளடக்கமாக கொண்டிருந்தது.
அஸ்டாரர் மார்ச் 1796 வரை ஒன்றரை ஆண்டுகள் வெளிவந்தது. அந்த காலகட்டத்தில், ஷிமாவோனியன் 18 இதழ்களை வெளியிட்டார், இவை மொத்தம் 965 பக்கங்கள் ஆகும்.
குறிப்புகள்[தொகு]
- ↑ Mesrovb Jacob Seth (1937). Armenians in India, from the Earliest Times to the Present Day: A Work of Original Research. Asian Educational Services. பக். 597. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-0812-2. https://books.google.com/books?id=BlreO8bmK30C&pg=PA598. பார்த்த நாள்: 24 June 2016.
- ↑ Sebouh Aslanian (4 May 2011). From the Indian Ocean to the Mediterranean: The Global Trade Networks of Armenian Merchants from New Julfa. University of California Press. பக். 87–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-94757-3. https://books.google.com/books?id=l0Kn-DMl5ZoC&pg=PA87. பார்த்த நாள்: 24 June 2016.
- ↑ "October 16 is Armenian Press Day". Panorama.. 16 October 2015. http://www.panorama.am/en/news/2015/10/16/armenia-press/1463641. பார்த்த நாள்: 24 June 2016.
- ↑ Kartar Lalvani (10 March 2016). The Making of India: The Untold Story of British Enterprise. Bloomsbury Publishing. பக். 383–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4729-2484-1. https://books.google.com/books?id=q4SlCwAAQBAJ&pg=PA383. பார்த்த நாள்: 25 June 2016.