அஸ்கியா சமாதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அஸ்கியா சமாதி | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iii, iv |
உசாத்துணை | 1139 |
UNESCO region | ஆபிரிக்கா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2004 (28 ஆவது தொடர்) |
அஸ்கியா சமாதி மாலி (Mali) நாட்டிலுள்ள காவோவில் (Gao) உள்ளது. இது சொங்காயின் முதற் பேரரசரான முதலாவது அஸ்கியா மொஹம்மத் என்பவர் புதைக்கப்பட்ட இடம் என நம்பப்படுகின்றது. 15 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கட்டப்பட்ட இது ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் ஆகும்.
மேற்கு ஆபிரிக்க சாஹேல் (Sahel) பகுதியின் நினைவுச் சின்னம் சார்ந்த மண் கட்டிட மரபில் அமைந்த சிறப்பான எடுத்துக்காட்டு என இதனை யுனெஸ்கோ விளக்குகின்றது. இந்தத் தொகுதி, பிரமிட் வடிவிலான ஒரு சமாதி, இரண்டு பள்ளிவாசல்கள், ஒரு இடுகாடு, ஒரு கூடல் களம் (assembly ground) என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. 17 மீட்டர்கள் உயரமான இது, இப்பகுதியில் அமைந்துள்ள குடியேற்றவாதகாலத்துக்கு முற்பட்ட நினைவுச் சின்னங்களுள் பெரியது ஆகும். இதுவே பிற்காலத்தில் இப் பகுதிகளில் பரவிய இஸ்லாமியக் கட்டிடக்கலைப் பாணிக்குரிய முதல் எடுத்துக்காட்டு ஆகும்.
1960 களிலும் 70 களின் நடுப் பகுதியிலும் இடம் பெற்ற பள்ளிவாசல் கட்டிடங்களின் விரிவாக்கம், 1999 இல் கட்டப்பட்ட சுற்று மதில் என்பன இக் களத்தில் செய்யப்பட்ட அண்மைக்கால வேலைகள் ஆகும். இதன் வரலாற்றுக் காலம் முழுவதிலும், மண் கட்டிடங்களைப் பேணுவதற்கு மிகவும் இன்றியமையாத சாந்து பூசலும் அடிக்கடி நடைபெற்று வந்துள்ளது. மின் விசிறிகள், மின் விளக்குகள், ஒலிபெருக்கிகள் என்பவற்றுக்காக 2000 ஆவது ஆண்டில் மின்னிணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.