மின் விசிறி
Jump to navigation
Jump to search
மின் விசிறி என்பது மின் ஆற்றலைப் பயன்படுத்தி விசிறியை ஓடச் செய்து காற்றோடத்தை தோற்றுவிக்கும் ஒரு கருவி ஆகும். வெப்ப காற்றை அகற்றி குளிர் காற்றை பரப்பவே பொதுவாக மின் விசிறி பயன்படுகிறது. இதைத் தவிர சமையலறை, தொழில்சாலை ஆகிய இடங்களில் காற்றோட்டத்தை திருப்பி வெப்பமான அல்லது புகைகலந்த காற்றை வெளியேற்றவும் விசிறிகள் பயன்படுகின்றன. வெப்ப காலத்தில் குளிர்ந்த காற்றோட்டத்தை பலர் நாடுகின்றனர். கணினி போன்ற இலத்திரனியல் சாதனங்களை குளிராக வைத்திருக்கவும் ஒரு வகை விசிறிகள் பயன்படுகின்றன. மின்விசிறிகள் சுழலக்கூடிய தகடுகளை வேகமாக மின்விசை கொண்டு சுழற்றுவதன் மூலம் காற்றோட்டத்தை உருவாக்குகின்றன. இத்தகடுகள், குறிப்பிட்ட கோணத்தில் வளைக்கப் பட்டிருப்பதால், அவை சுழலும்போது அவற்றின் பின் பகுதியில் உள்ள காற்றை உள்ளிழுத்து முன்னே தள்ளுகின்றன.