அவினாசி மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவினாசி மணி
பிறப்புதமிழ்நாடு,  இந்தியா
தேசியம்இந்தியன்
பணிதிரைப்படப் பாடலாசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்'

அவினாசி மணி (Avinasi Mani) திரைப்பட இயக்குநரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் பல திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சில படங்களை இயக்கியும் இருக்கிறார். "ஜானகி சபதம்', "ஆயிரத்தில் ஒருத்தி ', "மிட்டாய் மம்மி', "வேடனைத் தேடிய மான்' போன்ற பல படங்களை இயக்கினார். இதில் "ஜானகி சபதம்', "ஆயிரத்தில் ஒருத்தி' ஆகிய இரு படங்களில் இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்களில் ஒருவர்தான் இன்றைய "இயக்குநர் இமயம்' பாரதிராஜா.[1][2]

தொடக்கம்[தொகு]

அடிமைப் பெண் படத்தில் அவினாசி மணி எழுதிய காலத்தை வென்றவன் நீ காவியம் ஆனவன் நீ வேதனை தீர்ப்பவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ நீ நீ என்ற பாடல் காலத்தை வென்று நிற்கும் பாடல்களில் ஒன்று.

திரைப்படப் பட்டியல்[தொகு]

 1. ஜானகி சபதம்
 2. ஆயிரத்தில் ஒருத்தி
 3. மிட்டாய் மம்மி
 4. வேடனைத் தேடிய மான்

பாடலாசிரியர் பணி[தொகு]

 1. அடிமைப்பெண்
 2. நேற்று இன்று நாளை
 3. ரிக்ஷாக்காரன்
 4. கன்னிப் பெண்
 5. காக்கிசட்டை

இயற்றிய பாடல்களில் சில[தொகு]

 1. அடிமைப்பெண்-காலத்தை வென்றவன் நீ
 2. பக்திப்பாடல்-கற்பூர நாயகியே கனகவல்லி
 3. நேற்று இன்று நாளை - அங்கே வருவது யாரோ
 4. ரிக்ஷாக்காரன் - கொல்லிமலைக் காட்டுக்குள்ளே
 5. கன்னிப்பெண் - ஒளிபிறந்த போது மண்ணில்
 6. காக்கிசட்டை - பூப்போட்ட தாவணி போதையில்

மேற்கோள்கள்[தொகு]

 1. "ஒரு மணி நேரத்தில் எழுதிய பாடல்! - கவிஞர் முத்துலிங்கம்".
 2. "அம்மனும், ஈஸ்வரியும்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவினாசி_மணி&oldid=3401251" இருந்து மீள்விக்கப்பட்டது