அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்
Appearance
வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம் யாழ்ப்பணத்தின் வடக்கே அளவெட்டி என்ற ஊரின் தெற்கே வயற்கரை ஓரத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆகும்.
இக்கோவில் 250 ஆண்டுகள் பழமையானது என்பர். [சான்று தேவை] 1984 ஆகஸ்ட் 31 இல் இக்கோவில் புதிதாய்க் கட்டப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றது. அப்போது பிள்ளையார், முருகன், வைரவர் ஆகியோருக்கும் சுற்றத்துக் கோயில்கள் அமைக்கப்பட்டன. பின்னர் 2001 மே 4 ல் குடமுழுக்கு நடைபெற்றது.
சுற்றத்து தெய்வங்கள்
[தொகு]கோவிலைச்சுற்றிலும் பல சுற்றத்து தெய்வங்கள் காணப்படுகின்றன. முருகன், பிள்ளையார், சண்டேசுவரர் போன்ற தெய்வங்களும் தேர் உள்ள இடத்திற்கு அருகில் பைரவரும் காணப்படுகின்றார்.
கோவில் மரம்
[தொகு]இக்கோவிலின் கோவில் மரம் (தல விருட்சம்) வேப்பமரமாகும். கோவிலுக்கு முன் இரு கோவில் மரங்கள் காணப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
[தொகு]- த ஜஃப்னா. கொம் பரணிடப்பட்டது 2013-04-10 at the வந்தவழி இயந்திரம்
- யாழ் - அளவெட்டி தெற்கு வெளிவயல் ஸ்ரீ முத்துமாரியம்மை தேவஸ்தானம்: கும்பாபிஷேக விழா சிறப்புமலர் (2001)
இது இலங்கையில் உள்ள கோயில் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |