அலைபரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பண்பலை ஒலிபரப்புக்கான அலைபரப்பி.

மின்னணுவியலிலும், தொலைத்தொடர்பியலிலும் அலைபரப்பி அல்லது வானலை பரப்பி (transmitter) என்பது, வானலைகளை உருவாக்கும் மின்னணுக் கருவி ஆகும். வானலைகளைப் பயன்படுத்தி இயங்கும் எல்லா மின்னணுக் கருவிகளுக்கும் அலைபரப்பிகள் இன்றியமையாதவை. ஒலிபரப்புச் சாதனங்கள், ஒளிபரப்புச் சாதனங்கள், கையடக்கத் தொலைபேசிகள், கம்பியில்லாக் கணினி வலையமைப்புக்கள், அண்கம்பியிலிகளைப் பயன்படுத்தும் கருவிகள், வாகனத் தரிப்பிடக் கதவு திறப்பிகள், தானியங்கிக் கதவுகள் போன்றவை அலைபரப்பிகளைப் பயன்படுத்துகின்றன. "அலைபரப்பி" என்னும் சொல் தொடர்புத் தேவைகளுக்கும், வானலைமுறை நிலையறிதலுக்கும் வானலைகளை உருவாக்கும் கருவிகளைக் குறிப்பிடுவதற்கு மட்டுமே பயன்படுகிறது. ஒரே வகை மின்சுற்றுக்கலைக் கொண்டிருந்தாலும், நுண்ணலை அடுப்புக்கள் போன்ற வெப்பத்தை உருவாக்குவதற்காக வானலைகளை உருவாக்கும் கருவிகள் அலைபரப்பிகள் என அழைக்கப்படுவதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைபரப்பி&oldid=2462271" இலிருந்து மீள்விக்கப்பட்டது