அலிடா: பேட்டில் ஏஞ்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிடா: பேட்டில் ஏஞ்சல்
Alita: Battle Angel
இயக்கம்ராபர்ட் ரோட்ரிக்ஸ்
மூலக்கதைபேட்டில் ஏஞ்சல் அலிடா
படைத்தவர் யுகிடாகி ஷிரோ
திரைக்கதை
  • ஜேம்ஸ் கேமரன்
  • லாட்டா கலோரிடிஸ்
இசைடோம் ஹோல்கன்போர்க்
நடிப்பு
  • ரோசா சலசார்
  • கிறிஸ்டோஃப் வால்ட்ஸ்
  • ஜெனிஃபர் கானலி
  • மஹெர்ஷாலா அலி
  • எட் ஸ்க்ரீன்
  • ஜாக்கி எர்ரி ஹேலி
  • கீயன் ஜான்சன்
ஒளிப்பதிவுபில் போப்[1]
படத்தொகுப்புஸ்டீபன் ஈ. ரிவ்கின்
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்[2]
வெளியீடுபெப்ரவரி 5, 2019 (2019-02-05)(சிங்கப்பூர்)
பெப்ரவரி 14, 2019 (அமெரிக்கா)
ஓட்டம்122 நிமிடங்கள்[3]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150–200 மில்லியன்[4][5]

அலிடா: பேட்டில் ஏஞ்சல் (Alita: Battle Angel) என்பது 2019 ஆண்டு வெளியான அமெரிக்க அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படமானது யுகிடாகி ஷிரோவின் சப்பானிய மங்காவான பேட்டில் ஏஞ்சல் அலிடா என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தை ஜேம்ஸ் கேமரன் மற்றும் ஜோன் லாண்டு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு கேமரூன் மற்றும் லாட்டா கலோரிடிஸ் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுத, ராபர்ட் ரோட்ரிக்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் முதன்மைப் பாத்திரத்தில் ரோசா சலசார் நடிக்க, உடன் பிற பாத்திரங்களில் கிறிஸ்டோஃப் வால்ட்ஸ், ஜெனிஃபர் கானலி, மஹெர்ஷாலா அலி, எட் ஸ்க்ரீன், ஜாக்கி எர்ரி ஹேலி மற்றும் கீயன் ஜான்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது 2003இல் வெளியிடப்பட்டது. அவதார் மற்றும் அதன் அதன் அடுத்த பாகங்களில் கேமரூன் முழ்கி இருந்ததால், இப்படத்தின் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வந்தது. பல ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்படத்தின் இயக்குநராக ராபர்ட் ரோட்ரிக்ஸ் 2016 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டார். அதற்கடுத்து மாதம் இப்படத்தின் முதன்மைப் பாத்திரத்தில் ரோசா சலசார் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முதன்மை படப்பிடிப்பானது 2016 அக்டோபரில் ஆஸ்டினில் துவங்கி 2017 பெப்ரவரிவரை நீடித்தது.

அலிடா: பேட்டில் ஏஞ்சல் திரைப்படத்தை அமெரிக்காவில் 2019 பெப்ரவரி 14 அன்று 3டி மற்றும் ஐமாக்ஸ் பதிப்புகளாக வெளியிட 20ஆம் சென்சுரி பாக்ஸ் திட்டமிட்டுள்ளது.

கதைச்சுருக்கம்[தொகு]

நவீன அறிவியல் சரிவு காணும் எதிர்காலத்தில் கதை நடப்பதாக காட்டப்படுகிறது. அறிவியலாளர் ஒருவர் இயந்திரக் குப்பையில் கிடைக்கும் சேதமடைந்த அலிடாவுக்கு ‘சைப்ராக்’ பாணியில் முழு உருவம் கொடுக்கிறார். முழு உருவம் பெற்ற அலிடா தன்னைப் பற்றிய முந்தைய நினைவுகள் அழிந்த நிலையில் உள்ளாள். ஒரு காலகட்டத்தில் தனது முழு திறனையையும் அலிடா உணருகிறாள். அதுவரை அழகு பதுமையாக இருந்தவள், தீய சக்திகளுக்கு எதிரான தன் போரைத் தொடங்குகிறாள்.

மேற்கோள்கள்[தொகு]