அலகுப் பின்னம்
அலகுப் பின்னம் (Unit Fraction) என்பது தொகுதி எண்ணாக ஒன்றையும் பகுதி எண்ணாக நேர் நிறையெண்ணையும் கொண்ட, பின்னமாக எழுதப்பட்ட விகிதமுறு எண்ணாகும்.[1] ஓர் அலகுப் பின்னமானது நேர் நிறையெண்ணொன்றின் பெருக்கல் நேர்மாறாக அமையும்.
அலகுப் பின்னங்களுக்கான எடுத்துக்காட்டுகளாக , , , போன்றவற்றைக் கூற முடியும்.
தொடக்க எண் கணிதம்
[தொகு]இரண்டு அலகுப் பின்னங்களைப் பெருக்கினால் இன்னொரு அலகுப் பின்னமே கிடைக்கும்.
ஆனால், இரண்டு அலகுப் பின்னங்களைக் கூட்டினாலோ கழித்தாலோ வகுத்தாலோ பொதுவாக அலகுப் பின்னமல்லாத பெறுமானமே கிடைக்கும்.
அலகுப் பின்னங்களின் முடிவுள்ள கூட்டல்
[தொகு]எந்தவொரு நேர் விகிதமுறு எண்ணையும் அலகுப் பின்னங்களின் கூட்டுத்தொகையாகப் பல்வேறு வழிகளில் எழுத முடியும். எடுத்துக்காட்டாக,
அடுத்துள்ள பின்னங்கள்
[தொகு]இரண்டு பின்னங்களுக்கிடையிலான வேறுபாடு ஓர் அலகுப் பின்னத்திற்குச் சமனாக இருப்பின் அவ்விரு பின்னங்களும் அடுத்துள்ள பின்னங்கள் என அழைக்கப்படும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ["பின்னங்கள் (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2012-07-04. பார்க்கப்பட்ட நாள் 2012-05-08. பின்னங்கள் (ஆங்கில மொழியில்)]
- ↑ அடுத்துள்ள பின்னம் (ஆங்கில மொழியில்)