அறிவியல் கணிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக, நுட்ப அமைப்புக்களின் (systems) இயல்புகளைக் கணித மாதிரியாக விபரித்து கணினி மூலம் பாவனை (simulation) செய்து பகுப்பாயும் துறையே அறிவியல் கணிமை (scientific computing) அல்லது கணினிசார் அறிவியல் எனலாம். இது, கணித மாதிரிகளின் உருவாக்கம், கணியப் பகுப்பாய்வு நுட்பங்கள், கணினிகளைப் பயன்படுத்தி அறிவியல் பிரச்சினைகளைப் பகுத்தாய்ந்து தீர்வு காணுதல் போன்றவற்றுடன் தொடர்புடையது.[1] பல்வேறு அறிவியல் துறைகள் சார்ந்த பிரச்சினைகளில் கணினிப் பாவனையாக்கத்துடன் எண்சார் பகுப்பாய்வு, கோட்பாட்டுக் கணினி அறிவியல் போன்றவை சார்ந்த கணித்தல் முறைகளின் பயன்பாடே இதன் நடைமுறைப் பயன் ஆகும்.

மரபார்ந்த அறிவியல், பொறியியல் என்பவற்றோடு தொடர்புடைய கோட்பாடு, ஆய்வுகூடச் சோதனை ஆகியவற்றில் இருந்து இத்துறையின் அணுகுமுறை வேறுபட்டது. கணினிகளில் செயற்படுத்தப்படும் கணித மாதிரிகளின் மூலம் விளக்கம் பெறுவதே அறிவியல் கணிமையின் அணுகுமுறையாகும்.

குறிப்புகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_கணிமை&oldid=3232217" இலிருந்து மீள்விக்கப்பட்டது