அர்வாரி நதி
அர்வாரி ஆறு (Arvari River) இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறிய ஆறு. 90 கிமீ நீளமான இந்த ஆறு, ராஜஸ்தானின் ஆல்வர் மாவட்டத்தின் வழியாக பாய்கிறது. இந்த ஆறு 60 ஆண்டுகளுக்கு உலர்ந்த நிலையில் இருந்த பிறகு, இது 1990 ல் புதுப்பிக்கப்பட்டது. ராஜேந்திர சிங் நிர்வகிக்கும் தருண் பாரத் சங்கத்தின் உதவியுடன் பானோட்டா-கொலிலா கிராமத்தில் உள்ள மக்கள், ஆறு உருவாகும் இடத்தில் தடுப்பணையை 1986 ஆம் ஆண்டு உருவாக்கினர். அதைத் தொடர்ந்து ஆற்றோட்டப் பாதையினோரமான கிராம மக்களும் தடுப்பணைகளைக் கட்டினர். அணைகள் எண்ணிக்கை 375 ஐ எட்டியபோது, 1990 ஆம் ஆண்டில் மீண்டும் ஆறு ஓடத் தொடங்கியது. 60 ஆண்டுகளுக்கு மேலாக உலர்ந்த நிலையில் இருந்த பாேதும், 1995 ஆம் ஆண்டிலிருந்து அது வற்றாத நதியாக மாறியது. இந்த ஆற்றிற்கு 2004 ஆம் ஆண்டின் 'சர்வதேச நதி பரிசு' வழங்கப்பட்டது. 2000 மார்ச்சில் அப்போதைய ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் "டவுன் டூ பூமி" என்ற தலைப்பை வழங்கினார். ராஜேந்திர சிங்கிற்கு 2001 ஆம் ஆண்டில் மாக்சேசே விருது வழங்கப்பட்டது.[1][2][3]
சான்றுகள்
[தொகு]- ↑ "Charles lauds the `water warriors'". The Hindu. Nov 3, 2003 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 17, 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031117155820/http://www.hindu.com/2003/11/03/stories/2003110304091200.htm.
- ↑ "The water man of Rajasthan". Frontline (magazine), Volume 18 - Issue 17. Aug 18–31, 2001.
- ↑ "Biography of Rajendra Singh" (PDF). Magsaysay Award website. 2001. Archived from the original (PDF) on 2012-09-15. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.