அர்னால்ட் ஜோசப் டாயின்பீ
அர்னால்ட் ஜோசப் டாயின்பீ | |
---|---|
பிறப்பு | அர்னால்ட் ஜோசப் டாயின்பீ 14 ஏப்ரல் 1889 இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 22 அக்டோபர் 1975 யார்க், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | (அகவை 86)
தேசியம் | பிரித்தானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | வின்செஸ்டர் கல்லூரி பல்லியல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு (Balliol College) |
பணி | வரலாற்றாசிரியர் |
அறியப்படுவது | Universal History |
வாழ்க்கைத் துணை | ரோசலின்ந்த் (1913–1946) வெரோனிகா எம். பொல்டர் (Veronica M. Boulter) (1946–1975) |
பிள்ளைகள் | ஆண்டனி டாயன்பீ பிலிப் டாயன்பீ லாரன்சு டாயன்பீ |
உறவினர்கள் | அர்னால்ட் டாயன்பீ , ஜாக்கிலின் டாயன்பீ (சகோதரி) |
அர்னால்ட் ஜோசப் டாயின்பீ (Arnold Joseph Toinbee 14 ஏப்பிரல் 1889–22 அக்டோபர் 1975) பிரிட்டனைச் சேர்ந்த நூலாசிரியர், வரலாற்றாசிரியர் ஆவார்.[1]
லண்டனில் பிறந்த அர்னால்ட் டாயின்பீ 1950-60களில் பரவலாக அறியப்பட்டவர். இவர் எழுதிய வரலாற்றாய்வு என்னும் நூல் 12 மடலங்களைக் கொண்டது. உழைக்கும் மக்களின் நலன்களை உயர்த்த எழுதிய அறிஞர் என்றும் பாராட்டப்படுபவர். உலகில் போர்களும் பூசல்களும் ஒழிந்து மனித இனத்தில் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்று கூறினார்.[2]
பணிகள்
[தொகு]" மேற்கின் கேள்விகள் " என்ற நூலை கிரேக்கத்திலும், டர்க்கியிலும் எழுதியுள்ளார். லண்டன் பொருளியில் பள்ளியின், பன்னாட்டு வரலாற்று பேராசிரியராக இருந்தார். ராயல் பன்னாட்டு நிகல்வுகளின் நிறுவனத்தில் ( R I I A ) அயல்நாட்டு ஆராய்ச்சித் துறையின் இயக்குநராக இருந்துள்ளாா் ( 1939 - 43 ) அயல்நாட்டுத் து றையின் ஆராய்ச்சிப் பிாிவின் இயக்குநராக இருந்துள்ளாா் (1943-46).
நூல் விற்பனை
[தொகு]10 தொகுதிக் கொண்ட இவருடய வரலாற்றின் ஆராய்ச்சி (Study of History ) 1935 இல் அஎமாிக்காவில் மட்டும் 7000 பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. பின்னா் இவற்றின் சுருக்க நுால்களை வெளியிட்டபோது அமெரிக்காவில் மட்டும் 3 லட்சம் பிரதிகள் விற்றுள்ளன. இவாின் வெளியீடுகள் எண்ணிலடங்காதைவ. அவற்றில் சில
- வரலாற்றின் ஆராய்ச்சி ( 12 தொகுதிகள் )
- பெல்ஜியம் பிரான்ஸ் பல்கேயா போன்ற பல நாடுகளின் வரலாற்றையும் தனித்தனியாக எழுதியுள்ளாா்
- மாற்றமும் பழக்கமும் (1966)
- இறப்பு பற்றி மனிதனின் கவலை (1968)
- எதிா் காலத்தில் தப்பி வாழ்வது (1971)
- மனித இனமும் தாய் பூமியும் (1976)
- பன்னாட்டு நிகழ்வுகள் பற்றி பல வெளியீடுகள்
இவருடைய நினைவாக இவா் பெயாில் டாயின் பீ பாிசு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது (1987). வரலாறு மற்றும் சமுக அறிவியலில் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளா்களுக்கு இப்பாிசு வழங்கப்படும். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.