உள்ளடக்கத்துக்குச் செல்

அர்ச்சனா இராமசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ச்சனா இராமசுந்தரம்
அர்ச்சனா இராமசுந்தரம் 2016-ல்
பிறப்பு1 அக்டோபர் 1957 (1957-10-01) (அகவை 66)
படித்த கல்வி நிறுவனங்கள்
 • இராசத்தான் பல்கலைக்கழகம்
 • தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பணிகாவல் அதிகாரி
அறியப்படுவதுமத்திய துணை தரைப்படைக்குத் தலைமை தாங்கிய இந்தியாவின் முதல் பெண் காவல்துறை அதிகாரி
வாழ்க்கைத்
துணை
இராமசுந்தரம்
உறவினர்கள்சாருபாலா தொண்டைமான் (அண்ணி)

அர்ச்சனா இராமசுந்தரம் (பிறப்பு 1 அக்டோபர் 1957), என்பவர் தமிழ்நாடு காவல்துறையில் உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்ற இந்தியக் காவல்துறை அதிகாரி ஆவார். இவர் 2018-ல் ஓய்வு பெறும் வரை 37 ஆண்டுகள் இந்தியக் காவல் பணியில் பணியாற்றினார். இவர் மத்திய துணை தரைப்படைக்குத் தலைமை தாங்கிய இந்தியாவின் முதல் பெண் காவல்துறை அதிகாரி ஆவார்.[1] இவரது கணவர் இராமசுந்தரம் 2011-ம் ஆண்டு வரை தமிழக அரசின் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றினார்.

தொழில்

[தொகு]

அர்ச்சனா, இராசத்தான் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பிறகு ஒரு காவல்துறை அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். 1980-ல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்த இவர், 1980ஆம் ஆண்டின் ஒரே பெண் அதிகாரி ஆவார்.[2] 1989-ல், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1995-ல், இவருக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது.

மே 2014-ல், இவர் நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் கூடுதல் இயக்குநராகச் சேர்ந்தார். இவர் நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் கூடுதல் இயக்குநராகப் பதவியேற்ற இந்தியாவின் முதல் பெண் அதிகாரி ஆவார்.[3] இவரது நியமனத்தைச் சட்ட விரோதமான நியமனம் எனக் கருதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டரீதியாக வழக்குத் தொடர்ந்ததோடு, அர்ச்சனா நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[4][5] கூடுதல் தலைமை இயக்குநர் நியமனத்திற்கு முன் அனுமதி கோராததால், தமிழக அரசால் பதவியில் அமர்த்தப்பட்டிருந்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[6]

2015-ல், அர்ச்சனா மத்தியப் புலனாய்வுத் துறையிலிருந்து நீக்கப்பட்டு, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், 2015ஆம் ஆண்டு மத்தியப் புலனாய்வுத் துறை சர்ச்சைக்குரிய வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், 2017ஆம் ஆண்டு மத்தியப் புலனாய்வுத் துறைத் தலைவர் பதவிக்கு அர்ச்சனா பரிந்துரைக்கப்பட்டார்.[7][8]

3 பிப்ரவரி 2016 அன்று, இவர் சசசுத்திரா சீமா பலின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். துணை தரைப்படையினை வழிநடத்த அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட முதல் பெண் காவல்துறை அதிகாரி ஆவார்.[9][10][11] சூலை 2018-ல், அர்ச்சனாவுக்குப் பதிலாக ரஜினி காந்த் மிசுரா சஷாத்ரா சீமா பால் பிரிவின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[12] அர்ச்சனா 2018-ல் இந்தியக் காவல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் 37 ஆண்டுகள் காவல் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
 1. Tripathi, Rahul (2016-02-04). "Leadership is more important than gender: Archana Ramasundaram, Director General Sashastra Seema Bal". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/leadership-is-more-important-than-gender-archana-ramasundaram-director-general-sashastra-seema-bal/articleshow/50842713.cms?from=mdr. 
 2. "Power Trendsetter: Archana Ramasundaram". Verve Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-07-07. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
 3. Bhagat, Rasheeda. "Archana Ramasundaram is right material to become CBI director: RK Raghavan". The Hindu Business Line.
 4. Service, Indo-Asian News (2014-08-20). "Supreme Court: IPS officer Archana Ramasundaram's appointment to CBI post flawed and illegal". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
 5. "CBI vs Jayalalithaa Over Top Woman Cop, Supreme Court Intervenes". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
 6. BHAGAT, RASHEEDA. "The curious case of Archana Ramasundaram". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
 7. "After Controversy, Central Bureau of Investigation (CBI) Could Get First Woman Chief. Key Meeting Today". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
 8. "Archana Ramasundaram may become first woman CBI chief". The Asian Age. 2017-01-16. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
 9. Bureau, National (2016-02-02). "Archana Ramasundaram is SSB chief". The Hindu. https://www.thehindu.com/news/national/senior-ips-officer-archana-ramasundaram-is-sashastra-seema-bal-ssb-chief/article8180048.ece. 
 10. Singh, Vijaita (2016-02-04). "I was appointed because of my seniority, says SSB chief". The Hindu. https://www.thehindu.com/news/national/i-was-appointed-because-of-my-seniority-says-ssb-chief/article8189680.ece. 
 11. "Meet the IPS Officer Who Made History as India's First Woman to Head a Paramilitary Force!". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-10-27. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
 12. "First ever woman chief of SSB retires; Rajni Kant Mishra takes charge". The Economic Times. 2018-07-14. https://economictimes.indiatimes.com/news/defence/rajni-kant-mishra-takes-charge-as-ssb-dg/articleshow/60894141.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_இராமசுந்தரம்&oldid=3672158" இலிருந்து மீள்விக்கப்பட்டது