அருவி மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருவி மாதிரி

அருவி மாதிரி அல்லது அருவி முறையியல் என்பது 'மென்பொருள் மேம்பாட்டு முறையியல்' ஆகும். இது ஒவ்வொரு படிநிலையையும் வரிசையாக கடப்பதை வலியுறுத்துகிறது. இது திட்டமிடுவதற்கும், வடிவமைப்பதற்கும் கவனம் தரும் முறையாகும். மென்பொருள் கட்டமைப்பு பணிகள் சீராக, தொடர்ச்சியாக ஒன்றில் இருந்து ஒன்றுக்கு போவதால் அருவி மாதிரி என்று பெயர் வந்தது. இது புரிந்துகொள்வதற்கு எளிமையானதாகும். எனவே, மென்பொருள் தொடர்பான அடிப்படை நூல்களில் அருவி மாதிரியைப் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[1] ஏனைய மாதிரிகளை ஒப்பிடும்பொழுது, இது பழைமையானதாகும்.

நன்மையும் தீமையும்[தொகு]

மென்பொருளுக்கு என்னென்ன தேவை என்ற தெளிவு கிடைக்கக்கூடிய திட்டங்களுக்கு, அருவி மாதிரியை பயன்படுத்தலாம். சில வாடிக்கையாளர்கள் மென்பொருளுக்கான தங்கள் தேவைகளை அடிக்கடி மாற்றக் கூடும். அத்தகைய திட்டங்களுக்கு அருவி மாதிரி ஏற்றதல்ல. ஏனெனில், தேவைக்குறிப்புகளை முழுமையாக சேகரித்துவிட்டே பிற படிநிலைகளுக்கு செல்ல வேண்டும். அப்படி சென்ற பின்னர், மீண்டும் தேவைக்குறிப்புகளை மாற்றினால், திட்டத்தை முதலில் இருந்து தொடங்க வேண்டியிருக்கும்.

மாதிரி[தொகு]

வின்ஸ்டன் டபிள்யூ. ராய்ஸ் அவர்கள் அறிமுகப்படுத்திய மூல அருவி மாதிரியில், ஒரு மென்பொருளானது பின்வரும் கட்டங்களை வரிசையாக கடந்து உருவாக்கப்படும்.

  1. மென்பொருளுக்கான தேவைக்குறிப்புகள்
  2. வடிவமைப்பு
  3. கட்டமைப்பு
  4. ஒருங்கிணைப்பு
  5. சோதித்தல்
  6. நிறுவல் (செயற்படுத்தல்)
  7. பராமரித்தல்

இந்த மாதிரியின்படி, 'ஒரு கட்டத்தின் பணிகள் முடிவடைந்தால் மட்டுமே, அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்' என்கிற நிபந்தனை உள்ளது. எனினும், ராய்ஸ் மாதிரியின் இறுதி வடிவம் உட்பட இதன் திருத்தப்பட்ட மாதிரிகளும் உள்ளன. அவற்றின் நிகழ்முறைகளில் சிறிய, பெரிய வேறுபாடுகள் சேர்க்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Comparing Traditional Systems Analysis and Design with Agile Methodologies". University of Missouri – St. Louis (2009). பார்த்த நாள் 11 August 2014.
  2. "Managing the Development of Large Software Systems". மூல முகவரியிலிருந்து 15 மார்ச் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவி_மாதிரி&oldid=3286090" இருந்து மீள்விக்கப்பட்டது