அருண் கோயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண் கோயல்
இந்தியத் தேர்தல் ஆணையாளர்
பதவியில்
19 நவம்பர், 2022 – 9 மார்ச், 2024 (பதவி விலகல்) [1][2]
முன்னையவர்இராஜீவ் குமார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 திசம்பர் 1962 (1962-12-07) (அகவை 61)
பஞ்சாப்

அருண் கோயல் (Arun Goel), மேனாள் இந்தியத் தேர்தல் ஆணையாளர் ஆவார் .பஞ்சாப் மாநிலத் தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அருண் கோயல்,[3][4] இந்திய அரசின் கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் செயலராக 31 டிசம்பர் 2022 அன்று பணி ஓய்வு பெறும் நிலையில், 18 நவம்பர் 2022 அன்றே விருப்ப ஓய்வு பெற்றார். விருப்ப ஓய்வு பெற்ற மூன்றே நாளில் அருண் கோயலுக்கு தேர்தல் ஆணையாளராக பதவி வழங்கியிருப்பது விமர்சனத்திற்கு உள்ளானது.[5]

பதவி விலகல்[தொகு]

மார்ச் 9, 2024இல் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதிய நிலையில் குடியரசுத் தலைவரால் அக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[6] 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளினை அறிவிக்கும் சில நாள்களுக்கு முன்னர் இவர் பதவி விலகினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nath, Damini; G, Manoj C; Chopra, Ritika (9 March 2024). "EC quits, Commission down to one; PM panel to meet next week to fill vacancies". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  2. "'Very concerning': Opposition reacts to election commissioner Arun Goel's sudden resignation ahead of Lok Sabha polls". The Times of India. 9 March 2024. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  3. Retired IAS officer Arun Goel takes charge as Election Commissioner
  4. WHO IS ARUN GOEL?
  5. Arun Goel | Controversial Commissioner
  6. PTI (2024-03-09). "Election Commissioner Arun Goel resigns as Lok Sabha polls approach" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/election-commissioner-arun-goel-resigns-as-lok-sabha-polls-approach/article67933125.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_கோயல்&oldid=3911148" இலிருந்து மீள்விக்கப்பட்டது