அரி மோகன் பாங்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரி மோகன் பாங்கூர்
Hari Mohan Bangur
பிறப்பு1952/1953 (அகவை 70–71)[1]
தேசியம்இந்தியர்
கல்விஇந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை
பணிவணிகர்
பட்டம்முதன்மை செயல் அலுவலர், சிறீ சிமெண்ட்டு
பெற்றோர்பெனு கோபால் பங்கூர்
பிள்ளைகள்1 மகன், 1 மகள்

அரி மோகன் பாங்கூர் (Hari Mohan Bangur) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். 1952/1953 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். தற்போது இந்தியாவின் இராசத்தான் மாநிலம் பியாவர் நகரத்திலுள்ள சிறீ சிமெண்ட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை.[தொகு]

இவர் பெனு கோபால் பாங்கூரின் மகனும், முக்னி ராம் பாங்கூரின் கொள்ளுப் பேரனும் ஆவார்.[2]

இவர் பம்பாய் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் பொறியியல் பட்டம் படித்தார்.[1]

தொழில் வாழ்க்கை[தொகு]

பாங்கூர் 1992 ஆம் ஆண்டு முதல் சிறீ சிமெண்ட்டு நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார. மேலும் இதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.[1]

2002 ஆம் ஆண்டில் சிறீ சிமெண்ட்டு நிறுவனம் ஓர் ஆழ்ந்த சிக்கலில் இருந்தது, மேலும் இவர் தனது தந்தையின் ஒப்புதலுடன், பிரெஞ்சு சிமெண்ட்டு நிறுவனமான விக்காட்டுடன் கிட்டத்தட்ட 50/50 பங்குகளை இணைக்க ஒப்புக்கொண்டார்.[3] பின்னர் இணைப்பை நிராகரித்து, ஒரு தசாப்தத்தில் தொழிற்சாலையின் திறனை பத்து மடங்கு அதிகரித்து, பங்கு விலை பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த ரூ 45 என்பதை ரூ 4,500 என்ற அளவுக்கு உயர்த்தினார்.[3]

2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, சிறீ சிமெண்ட்டில் 65% பங்குகளை பாங்கூர் குடும்பம் வைத்திருந்தது.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார், அவர் இணை நிர்வாக இயக்குநராக உள்ளார்.[3][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Stocks. "Executive Profile: Hari Mohan Bangur". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 13 May 2017.
  2. 2.0 2.1 2.2 "Shree Cement's Bangurs Break Tradition To Emerge Among Asia's Richest". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 13 May 2017.
  3. 3.0 3.1 3.2 "How HM Bangur Turned Around Shree Cement". Forbes India. 18 November 2013. பார்க்கப்பட்ட நாள் 13 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரி_மோகன்_பாங்கூர்&oldid=3931013" இலிருந்து மீள்விக்கப்பட்டது