ஸ்ரீ சிமெண்ட்
Appearance
வகை | பொது தேபச: SHREECEM முபச: 500387 |
---|---|
தலைமையகம் | கொல்கத்தா, இந்தியா |
உற்பத்திகள் | சிமெண்ட் |
ஸ்ரீ சிமெண்ட் என்பது இந்தியாவைச் சேர்ந்த சிமெண்ட் உற்பத்தியாளர் ஆகும். 1979 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்பொழுது கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. ஸ்ரீ சிமெண்ட் மற்றும் பங்கூர் சிமெண்ட் என்று இரண்டு பெயர்களில் இந்த நிறுவனம் சிமெண்ட் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்துக்கு இந்தியா மற்றும் ஐக்கிய அமீரகத்தில் தொழிற்சாலைகள் உள்ளன.[1]