அரிசிம்மதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிசிம்மதேவன்
மிதிலையின் அரசன்
ஆட்சிக்காலம்1304 - 1325
முன்னையவர்சக்திசிம்மதேவன்
பிறப்புசிமரௌன்[1]
இறப்புகாட்மாண்டு
மரபுமிதிலையின் கர்னாட் வம்சம்
தந்தைசக்திசிம்மதேவன்

அரிசிம்மதேவன் (Harisimhadeva) (அரிசிங் தேவன் என்றும் அழைக்கப்படுகிறார்) கர்னாட்டு வம்சத்தின் கடைசி மன்னராக இருந்தார். இவர் இந்தியாவின் இன்றைய வடக்கு பீகாரின் மிதிலைப் பகுதியையும் தெற்கு நேபாளத்தின் சில பகுதிகளையும் 1304 முதல் 1325 வரை ஆட்சி செய்தார்.[2][3] இவரது போர் மற்றும் அமைதி அமைச்சராக இருந்த சந்தேசுவரர் தாக்கூர் என்பவர் இராஜநித்திரத்னாகரம் என்ற புகழ்பெற்ற நூலை இயற்றினார். [4] கியாத் அல்-தின் துக்ளக்கின் படையெடுப்பிற்குப் பிறகு, நேபாள மலைகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு இவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. [5] இவரது சந்ததியினர் இறுதியில் மைதிலி மொழியின் புரவலர்களாக அறியப்பட்ட காட்மாண்டுவின் மல்லர் வம்சத்தின் நிறுவனர்களாக ஆனார்கள்.[6]

ஆட்சி[தொகு]

அரிசிம்மதேவனின் ஆட்சியானது மிதிலையின் வரலாற்றில் ஒரு முக்கியக் காலமாகக் கருதப்பட்டது. இவரது நான்கு தசாப்த கால ஆட்சியில் பல நிகழ்வுகள் நடந்தன. இவர் மைதிலி பிராமணர்களுக்கு நான்கு வர்ண அமைப்பு போன்ற பல சமூக மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். மேலும், பாஞ்சி என்ற பரம்பரை பதிவுகளைஉருவாக்கினார். இவரது அரசவைகளில் திரண்டிருந்த அறிஞர்கள் மிதிலை மீது நிரந்தர முத்திரையை பதித்தனர். [7]

இவரது சந்ததியினர் இறுதியில் மல்ல வம்சத்தை நிறுவினர். இது காட்மாண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சுமார் 300 ஆண்டுகளாக ஆட்சி செய்தது. மல்லர்கள் மைதிலியை உயர்சாதியினரின் மொழியாக நிறுவினர். [8] கர்னாடாக்களின் ஒரு பிரிவினர் மிதிலாவில் தங்கியிருந்ததாகவும், இறுதியில் அவர்கள் வட பீகாரின் கந்தவாரிய ராஜபுத்திரர்களாக மாறியதாகவும் கருதப்படுகிறது. [9] அரிசிம்மதேவனின் பிற வழித்தோன்றல்களான பிருத்விசிம்மதாவன் உட்பட பீகாரின் சம்பாரண் மாவட்டத்தில் 15 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதற்கும் சான்றுகள் காட்டுகின்றன. [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Regmi Research Series, Volume 4". 1972. p. 10. பார்க்கப்பட்ட நாள் 7 January 2018.
  2. Jha, Sureshwar (2005). "Political Thinkers in Mithila". p. 192. பார்க்கப்பட்ட நாள் 7 January 2018.
  3. Sarkar, Benoy Kumar (1985). The Positive Background of Hindu Sociology: Introduction to Hindu Positivism. p. 514. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120826649. பார்க்கப்பட்ட நாள் 7 January 2018.
  4. Ram Gopal Sharma (1966). "Rajanitiratnakara, A Medieval Sanskrit Text on Politics". Proceedings of the Indian History Congress 28: 195–201. 
  5. Choudhary, Radhakrishna. History of Muslim rule in Tirhut, 1206-1765, A.D.
  6. Gellner, D. Nationalism and Ethnicity in a Hindu Kingdom: The Politics and Culture of Contemporary Nepal. p. 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136649561. பார்க்கப்பட்ட நாள் 7 January 2018.
  7. Radhakrishna Choudhary (1961). "Harisimhadeva of Mithila". Annals of the Bhandarkar Oriental Research Institute 42: 123–140. 
  8. Sinha, C. P. N. (1970). "Decline of the "Karnatas" of "Mithila"". Proceedings of the Indian History Congress 32: 79–84. 
  9. P. Pathak (1983). "Origin of the Gandhavaria Rajputs of Mithila". The Journal of the Bihar Puravid Parisad Vii And Viii: 406–420. https://archive.org/details/in.ernet.dli.2015.283324/page/n567. 
  10. CPN Sinha (1970). "Decline of the Karnatas of Mithila". Proceedings of the Indian History Congress 32: 79–84. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசிம்மதேவன்&oldid=3826892" இலிருந்து மீள்விக்கப்பட்டது