அரிகர் நாத் சாசுத்திரி
அரிகர் நாத் சாசுத்திரி Harihar Nath Shastri हरि हर नाथ शास्त्री | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1952–1953 | |
பின்னவர் | சிவ நாராயண் தண்டன் |
தொகுதி | கான்பூர் மக்களவைத் தொகுதி Central]] |
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேசம் | |
பதவியில் 1936–1939 | |
பதவியில் 1946–1947 | |
தலைவர், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசு | |
பதவியில் 1933–1935 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1905 பலியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
கல்வி | பட்டதாரி பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
அரிகர் நாத் சாசுத்திரி (Harihar Nath Shastri) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச்[1] சேர்ந்த இவர் கான்பூரின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அறியப்படுகிறார். [2] தொழிலாளர் தலைவராகவும் இவர் தீவிரமாக பணியாற்றினார். 1920 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பொதுவுடமை வாதியாகத் திகழ்ந்தார். ஆனால் 1930 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மிதவாதியாகக் கருதப்பட்டார். 1948 ஆம் ஆண்டில் இந்திய தேசிய இரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் முதல் தலைவராக இருந்தார்.[3] 1925 ஆம் ஆண்டில் மக்கள் சேவகர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக அதன் நிறுவனர்-இயக்குனர், மறைந்த லாலா லச்சபதி ராயால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் ஒரு வருடம் தனிச் செயலாளராகப் பணிபுரிந்தார். 1947 ஆம் ஆண்டில் இவர் இந்திய அரசியலமைப்புச் சபையில் உறுப்பினரானார், அது கலைக்கப்பட்டவுடன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brass, Paul (1965). Factional Politics in an Indian State: The Congress Party in Uttar Pradesh. University of California Press. pp. 197. பார்க்கப்பட்ட நாள் 29 April 2014.
harihar nath shastri.
- ↑ Joshi, Chitra (2003). Lost Worlds: Indian Labour and Its Forgotten Histories. Orient Blackswan. p. 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788178240220. பார்க்கப்பட்ட நாள் 29 April 2014.
- ↑ "History: National Federation of Indian Railwaymen". பார்க்கப்பட்ட நாள் 29 April 2014.