அரநாடான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரநாடன் மொழி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்மலப்புறம் மாவட்டம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
200 in more accessible areas  (2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு)[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3aaf
மொழிக் குறிப்புaran1261[2]


அரநாடான் மொழி ஒரு திராவிட மொழியாகும்.[3] இந்தியாவின் கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இம்மொழி பேசப்படுகிறது. இவர்களிற் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தின் மலப்புறம், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 200 பேர் மட்டுமே இம்மொழியைப் பேசுகின்றனர். இது மலையாளத்தையும், தமிழையும் ஒத்திருக்கும். கன்னட மொழி உறுப்புகளை கொண்டிருக்கும்.[4] இம்மொழி மலையாளத்துடன் 63%-69% சொல் ஒற்றுமையும், தமிழ் மொழியுடன் 53%-55% வரையான சொல் ஒற்றுமையையும் கொண்டுள்ளது.[5] இம்மொழிக்கு எழுத்துக் கிடையாது.

இம்மொழி அழியும் நிலையில் உள்ள ஒரு மொழியாகும். இம்மொழி பேசுவோர் மிகக் குறைவு என்பதாலும், இவர்களுக்கெனத் தனிக் குடியிருப்புக்கள் இல்லாமல், பிற மொழி பேசுவோருக்கு மத்தியில் வாழ்வதாலும் தாக்குப் பிடிப்பதற்கான இதன் பலம் மிகவும் குறைவு. இம்மொழி பேசுவோரிடையே கல்வியறிவு குறைவாக இருப்பது இம்மொழி ஓரளவு உறுதியாக இருக்க உதவுகிறது.[6]

சான்றுகள்[தொகு]

  1. அரநாடன் மொழி at Ethnologue (18th ed., 2015)
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Aranadan". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/aran1261. 
  3. Ethnologue report for language code: aaf
  4. Kakkoth, Seetha (2004). "Demographic profile of an autochthonous tribe: the Aranadan of Kerala". Anthropologist 6 (3): 163–167. http://www.krepublishers.com/02-Journals/T-Anth/Anth-06-0-000-000-2004-Web/Anth-06-3-159-233-2004-Abst-PDF/Anth-06-3-163-167-2004-Kakkoth-S/Anth-06-3-163-167-2004-Kakkoth-S.pdf. பார்த்த நாள்: 5 April 2011. 
  5. Ethnologue - Aranadan
  6. Ethnologue - Aranadan
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரநாடான்&oldid=2462532" இருந்து மீள்விக்கப்பட்டது