அரசு மேல்நிலைப் பள்ளி, கள்ளிக்குடி
கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி (Kallikudi Higher Secondary School) [1]இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் மதுரையிலுள்ள கள்ளிக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது.
1953 ஆம் ஆண்டு சூன் மாதம் 20 ஆம் தேதியன்று ஒரு ஆரம்பப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது. உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த இப்பள்ளி 01.07.1978 ஆம் ஆண்டு ஒரு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியின் பரப்பளவு 1.92 ஏக்கர்களாகவும், விளையாட்டு மைதானம் 5 ஏக்கர்களாகவும் உள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான இருபால் மாணவர்களுக்கும் இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்போது பள்ளியில் 31 ஆசிரியர்களும் 500 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மாணவர்களும் உள்ளனர். பள்ளி தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை 30 தலைமையாசிரியர்கள் இங்கு பணியாற்றி உள்ளனர். கற்பித்தலுக்காக ஆறு வகுப்பறைகளும் இதர பணிகளுக்காக இரண்டு அறைகளும் பள்ளியில் உள்ளன.
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுகிறது.[2] [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்வு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/feb/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3794359.html. பார்த்த நாள்: 22 May 2023.
- ↑ Tamil, News 6 (2022-10-17). "கள்ளிக்குடியில் பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்". News6தமிழ் (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-22.
{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link) - ↑ மலர், மாலை (2022-04-28). "மருத்துவ முகாம்". www.maalaimalar.com. Retrieved 2023-05-22.