அரசு மேல்நிலைப்பள்ளி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு மேல்நிலைப்பள்ளி பழைய ஜெயங்கொண்டம் (Government Higher Secondary School Palayajayankondam) என்பது தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியின் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியாகும்.[1] இப்பள்ளியானது இக்கிராம மக்களுக்கும், அதனைச் சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கும் கல்வி போதித்து வரும் ஒரு கல்வி நிறுவனமாகும்.

வரலாறு[தொகு]

இப்பள்ளியானது 1966ஆம் ஆண்டு பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த சொக்கலிங்க செட்டியாரின் குடும்பத்தாரால் துவக்கப்பள்ளியாகத் தொடங்கப்பட்ட பள்ளியாகும். பின்னர் இடைநிலைப்பள்ளியாகவும், உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு 52 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டுவருகிறது.

இப்பள்ளியில் ஆறாம் வருப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 650க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளைக் கொண்டும், மேல்நிலைக்கல்வியில் 330க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளைக் கொண்டும், 33 இருபால் ஆசிரியர்களைக் கொண்டும் ஊர்ப் பொதுமக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]