அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்ரீகாகுளம்
வகை | அரசு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 2008 |
துணை வேந்தர் | மருத்துவர் சி. வி. ராவ் |
முதல்வர் | மருத்துவர் ஏ. கிருஷ்ணவேணி |
பட்ட மாணவர்கள் | 150/ஆண்டு |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | டாக்டர் என்.டி.ஆர். மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் |
இணையதளம் | https://www.rimssrikakulam.org/ |
அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்ரீகாகுளம் (Government Medical College, Srikakulam)(முன்னர் ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் என்று அறியப்பட்டது) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் அமைந்துள்ள ஒரு மருத்துவ நிறுவனம் ஆகும். இது டாக்டர் என்டிஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இது ஸ்ரீகாகுளத்தில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று
வரலாறு[தொகு]
இந்நிறுவனத்தை அப்போதைய முதல்வர் எ. சா. ராஜசேகர் ரெட்டி திறந்து வைத்தார். முன்னர் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் கழகம் எனப் பெயரிடப்பட்ட இம்மருத்துவக் கல்லூரி பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்ரீகாகுளம் என் மாற்றப்பட்டுள்ளது. எனவே கல்லூரி தலைவர் பதவியானது 'இயக்குநர்' எனபதிலிருந்து 'முதல்வர்' என மாற்றப்பட்டது.[2][1]
மாணவர் சேர்க்கை[தொகு]
இந்த நிறுவனம் 100 இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுடன் தொடங்கப்பட்டது. இது 2019-2020 கல்வியாண்டிலிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டது. 2019-20ஆம் கல்வியாண்டிலிருந்து 11 பேர் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கியுள்ளது. மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "About Government Medical College, Srikakulam" இம் மூலத்தில் இருந்து 6 ஜூன் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190606135701/http://rimssrikakulam.org/.
- ↑ "TB test unit opened in RIMS, Srikakulam". The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tb-testing-unit-opened-in-srikakulam-rims/article8290822.ece.
http://dme.ap.nic.in/nodaldme/first_regulations_g.o. __memo.html