அரசு மருத்துவக் கல்லூரி, சங்காரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மருத்துவக் கல்லூரி, சங்காரெட்டி
நிறுவப்பட்டது2022
அமைவுசங்காரெட்டி, இந்தியா
இணையதளம்gmcsangareddy.org

அரசு மருத்துவக் கல்லூரி, சங்காரெட்டி (Government Medical College, Sangareddy) இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் , சங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

வரலாறு[தொகு]

₹30 கோடி செலவில் கட்டப்பட்ட இம்மருத்துவக் கல்லூரி 2022 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.[2] சங்காரெட்டி மருத்துவக் கல்லூரிக்கு 2022-2023 ஆம் ஆண்டு முதல் 150 இளங்கலை மாணவர்களுடன் வகுப்புகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.[3]

நவம்பர் 15, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 அன்று கே. சந்திரசேகர் ராவ் 8 மருத்துவக் கல்லூரிகளின் ஒரு பகுதியாக இக்கல்லூரியை தொடங்கி வைத்தார்.[4] மகபூபாபாத்து, மஞ்செரியல், இயக்தியால், வனபர்த்தி, கொத்தகூடம், நாகர்கர்னூல் மற்றும் ராமகுண்டம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளவை இதர ஏழு மருத்துவக்கல்லூரிகளாகும்.

திற்ப்புவிழாவின்போது 26 பேராசிரியர்கள், 45 உதவிப் பேராசிரியர்கள், 15 இணைப் பேராசிரியர்கள், 50 மூத்த குடியிருப்பாளர்கள், 11 அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் 25 அலுவலக ஊழியர்கள் பணியில் சேர்ந்திருந்தனர். மருத்துவ மாணவர்களைப் பொறுத்த வரையில், முதல் சுற்று சேர்க்கையில் மாநில ஒதுக்கீட்டில் 97 மாணவர்களும், அகில இந்திய ஒதுக்கீட்டில் மூன்று மாணவர்களும் சேர்ந்துள்ளனர். எஞ்சியுள்ள 50 இடங்கள் இரண்டாவது சுற்று சேர்க்கையின்போது நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Avadhani, R. (2022-11-12). "Sangareddy Government Medical College inauguration scheduled for November 15" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/sangareddy-government-medical-college-inauguration-scheduled-for-november-15/article66128511.ece. 
  2. Avadhani, R. (2022-07-18). "Medical college in Sangareddy ready for inauguration" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/medical-college-in-sangareddy-ready-for-inauguration/article65650716.ece. 
  3. "MCI grants 150 MBBS seats to Sangareddy Medical College". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-08-11. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  4. "Telangana: KCR launches MBBS academic session at 8 newly built govt medical colleges". The Siasat Daily (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-11-15. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.