கொத்தகூடம்
கொத்தகூடம் కొత్తగూడెం کوتگوڈیم indian new york | |
---|---|
ஊர் | |
![]() பத்திராச்சலம் தொடருந்து நிலையம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
மாவட்டம் | பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 16.10 km2 (6.22 sq mi) |
ஏற்றம் | 89 m (292 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 79,589 |
• அடர்த்தி | 4,900/km2 (13,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 507 xxx |
தொலைபேசி குறியீடு எண் | +91-8744 |
வாகனப் பதிவு | TS 04 |
பாலின விகிதம் | 1:1 ♂/♀ |
கொத்தகூடம் (Kothagudem) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் புதிதாக துவக்கப்பட்ட பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இப்பகுதியில் உள்ள சிங்கரேணியில் திறந்த வெளி நிலக்கரிச் சுரங்கங்கள் அமைந்துள்ளது. மேலும் மனகுரு எனுமிடத்தில் கனநீர் தொழிற்சாலையும் உள்ளது.
மக்கள் தொகையியல்[தொகு]
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொத்தகூடம் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 79,819 ஆகும். அதில் ஆண்கள் 39,001; பெண்கள் 40,818 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1047 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 81.15 % ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 88.13 % ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 74.54 % ஆகவும் உள்ளது. [3] கொத்தகூட நகரத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.26%; இசுலாமியர்கள் 13.79%; கிறித்தவர்கள் 3.50%; மற்றவர்கள் 0.45% ஆக உள்ளனர்.
இந்நகரத்தில் தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகள் மொழிகள் பேசப்படுகிறது.
போக்குவரத்து[தொகு]
கொத்தகூடம் நகரம், மாநிலத் தலைநகர் ஐதராபாத்திலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம், பத்ராச்சலம் ரோடு தொடருந்து நிலையம் (BDCR) ஆகும்.
கல்வி[தொகு]
- காகாதிய பல்கலைகழகப் பொறியியல் கல்லூரி
- ஆடம்ஸ் பொறியியல் கல்லூரி Adams Engineering College
- நவபாரத் பொதுப் பள்ளி
- தன்வந்திரி மருந்தாக்கவியல் கல்லூரி
- அரசு பாலிடெக்னிக் கல்லூரி[4]
- சிங்கரேணி மகளிர் கல்லூரி
- விவேகவர்தினி கல்லூரி
தொழிற்சாலைகள்[தொகு]
சிங்கரேணி திறந்த வெளி நிலக்கரி சுரங்கங்களின் தலைமையகம் கொத்தகூடத்தில் உள்ளது. [5] கொத்தகூடத்தில் உள்ள பிற தொழிற்சாலைகள்;
- கொத்தகூடம் அனல் மின் நிலையம்
- தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகம்
- ஐடிசி பத்திராச்சலம் காகித தொழிற்சாலை
- நவபாரத் இரும்பு உலோகத் தொழிற்சாலை
- கனநீர் தொழிற்சாலை, மனகுரு
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Urban Local Body Information". Government of Telangana இம் மூலத்தில் இருந்து 15 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160615135503/http://dtcp.telangana.gov.in/ULBs-List-68.pdf. பார்த்த நாள்: 28 June 2016.
- ↑ "District Census Handbook – Karimnagar" (PDF). pp. 14–15,40. http://www.censusindia.gov.in/2011census/dchb/2810_PART_B_DCHB_KHAMMAM.pdf. பார்த்த நாள்: 2 January 2016.
- ↑ Kothagudem Population Census 2011
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170704150414/http://kothagudemgovtpoly.nic.in/.
- ↑ "Kothagudem area tops in coal production". http://www.thehindu.com/news/national/telangana/kothagudem-area-tops-in-coal-production/article8931205.ece.