அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையும் ஆராய்ச்சி நிலையமும் (Arignar Anna Memorial Cancer Hospital & Research Institute) என்பது தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனை ஆகும்[1]. பேரறிஞர் அண்ணாவின் நினைவாக உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையமாக 1969இல் அப்போதைய அரசால் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சுற்றுப்புறக் கிராமங்களில் புற்று நோய் கண்டறியும் சோதனை முகாம்களை நடத்தியது. இலவசமாக நோயாளிகள் மருத்துவம் பெறுகின்றனர். இன்று கதிர் மருத்துவம், அறுவை மருத்துவம், வேதிமருத்துவம், ஆராய்ச்சி என்று ஒரு புற்றுநோய்க்கான முழுமையான மருத்துவமனையாகத் திகழ்கிறது. மருத்துவ இயற்பியலில் பட்ட மேல் படிப்பு வசதியும் உள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்த அண்ணா, புற்று நோயால் இயற்கை எய்திய பின் அவர் நினைவாக தொடங்கப்பட்டது. தற்பொழுது வட்டார புற்றுநோய் மையமாக (Regional Cancer Center) இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது[2][3].

மேற்கோள்கள்[தொகு]