அரசுமுறைப் பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை பிரான்சிசு 2015ஆம் ஆண்டில் பிலிப்பீன்சு நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது அவருக்கு அளிக்கப்பட்ட நாட்டு வரவேற்பு

அரசுமுறைப் பயணம் என்பது ஒரு நாட்டுத் தலைவர் வேற்று நாட்டின் தலைவர் ஒருவரின் அழைப்பினை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் செய்வதைக்குறிக்கும். இப்பயணக்காலத்தில் அழைப்பினை விடுத்த நாட்டுத்தலைவர் விருந்தோம்பல் புரவலராகக் (official host) கருதப்படுகின்றார். இவ்வகையான அரசுமுறைப் பயணங்கள் இரு இறைமையுள்ள நாடுகளிடையேயான உறவின் மிக உயரிய வெளிப்பாடாகக் கருதப்படுகின்றது. நாடாளுமன்ற முறை உள்ள நாடுகளில் அரசுத் தலைவர் இவ்வகை அழைப்பினை ஏற்பதோ விடுப்பதோ அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றப்பின்பே முடிவு செய்யப்படுவது வழக்கம்.[1][2][3]

இப்பயணக்காலத்தில் சிறப்பு வரவேற்பு முதல், படைப்பிரிவினரின் அணிவகுப்பு உட்பட பல வெளிப்படையான மரியாதை விருந்தினருக்கு செலுத்தப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசுமுறைப்_பயணம்&oldid=3768209" இருந்து மீள்விக்கப்பட்டது