உள்ளடக்கத்துக்குச் செல்

அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்
[[படிமம்:|150px|நுழைவாயில்]]
குறிக்கோள் ஒழுக்கமுடன் உயர் கல்வி பெறுவோம்
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் கிழக்கு மாகாணம்
மாவட்டம் மட்டக்களப்பு
இதர தரவுகள்
அதிபர் வீ. கோபாலப்பிள்ளை
துணை அதிபர்
ஆரம்பம் சூன் 1, 1910
முதல் அதிபர் கொப்பரசு சுவாமிகள்
நிறுவப்பட்ட ஆண்டில் மாணவர் தொகை 12
தற்போதைய மாணவர்கள் 778
தற்போதைய ஆசிரியர்கள் 32
தகவல்கள் பெறப்பட்ட தேதி சூன் 20, 2011

அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் இலங்கையின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். இப்பாடசாலை இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் ஒரு பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பம்

[தொகு]

இப்பாடசாலை சூன் 1, 1910இல் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் 12 மாணவர்கள் இப்பாடசாலையில் இருந்தனர்.

பாடசாலையின் மகுடவாசகம்

[தொகு]
  • ஒழுக்கமுடன் உயர் கல்வி பெறுவோம் [1]

உருவாக்கமும், வரலாற்று பின்னணியும்

[தொகு]

கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுவோருக்கு முன்னுரிமை வழங்கும் நோக்குடன் இப்பாடசாலை தொடங்கப்பட்டது.[1] இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 1910ம் ஆண்டில் கொப்பரசு சுவாமிகளால் உருவாக்கப்பட்ட இப்பாடசாலைக்கு ஆரம்பத்தில் மட்/அரசத்தீவு உரோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலை எனப்பெயர் வைத்தனர். 1923ம் ஆண்டு காலப்பகுதியில் இப்பாடசாலையில் இரண்டு வகுப்புக்கள் மாத்திரம் காணப்பட்டது. 1978ல் மட்/அரசத்தீவு கனிஸ்ட வித்தியாலயம் எனவும், 1980ம் ஆண்டில் அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயம் எனவும், 1990ம் ஆண்டு மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாயமாகவும் பெயர் மாற்றப்பட்டது.

தற்போதைய நிலை

[தொகு]

இப்பாடசாலையில் தற்போது 778 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். மொத்தமாக 32 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். தற்போதைய அதிபராக வீ. கோபாலப்பிள்ளை பணியாற்றி வருகின்றார்.

பாடசாலையின் அபிவிருத்திகளும், சிறப்பம்சங்களும்

[தொகு]

இப்பாடசாலை ஆரம்பத்தில் உரோமன் கத்தோலிக்கப் பாடசாலையாக இருந்த பின்னரே மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகாவித்யாலயமாக பெயர் மாற்றப்பட்டு தரம் உயர்த்ப்பட்டது. இப் பாடசாலை மாணவர்கள் மாவட்ட மட்டம், மாகாணமட்டம் போட்டிகளிலும் பங்குபற்றி பல சாதனைகள் படைத்துள்ளனர். அதேநேரத்தில் கல்வி அபிவிருத்தியிலும் பல்வேறு முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. 2007ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளுக்கு முன்னர் இப்பாடசாலையில் கணணிகூடம், பேன்ட் வாத்தியம், விஞ்ஞான ஆய்வுகூடம், ஒலி-ஒளி சாதனக் கூடம் என்பன அமைந்திருந்தன. ஆனால் இடம் பெயர்வுக்கு பின்னால் அவை அனைத்தும் இழக்கப்பட்ட பாடசாலையாக இது மாறிவிட்டது. இருந்தும் சில அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளைக் கொண்டு இழந்த பௌதீக வளங்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்க நிறுவன உதவி

[தொகு]

கட்டடவசதி மிகவும் குறைவாக காணப்பட்ட இப்பாடசாலைக்கு அமெரிக்க உதவி நிறுவனம் USAID 2009ம் ஆண்டு இரு மாடி கட்டங்களை அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம் பாடசாலையின் இடநெருக்கடி ஒரளவு குறைந்துள்ளது. இப்பாடசாலை எதிர்வரும் ஆண்டில் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவிருக்கின்றது.

பாடசாலைக் கீதம்

[தொகு]
அரசடித்தீவினில் அமைந்திடும் வித்தி
ஆலயமே கலை ஆலயமே
ஆயிரம்மாயிரம் ஆண்டுகளாக
அருள்மொழியும் தான் தோன்றி
ஈஸ்வரன் கருணை எமக்கிருப்பதனால்
எழுவோம் முயல்வோம் வாழ்வோம்
இறைவனின் திருவடி துதிப்போம்
எமையீன்றதாய் தந்தையை மதிப்போம்.
அறிவே குரு என நினைப்போம்
அகிலம் போற்ற வாழ்வோம்
அரசடித்தீவினில்…………
தாய் மொழியாந் தமிழ்தேன்மொழியோடு
தரணி மொழி ஆங்கிலமும்
வாழ்வினைப் பெருக்கும் கமத் தொழிலோடு
வளம்தரும் கைத்தொழில் பயில்வோம்
மாண்புறு கலை விஞ்ஞானம்-அது
மதியபுதிய விஞ்ஞானம்
ஓங்கிய கணிதமும் படிப்போம்
ஆரசடித்தீவினில்………..

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 தீவொளி சிறப்பு மலர் (PDF). மட்/மமே/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம். 15 செப்டெம்பர் 2024.