அம்பேத்கர் இன்றும் என்றும் (தொகுப்பு நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்பேத்கர் இன்றும் என்றும் என்ற தொகுப்பு நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.[1] ரூபாய் 300 மதிப்புள்ள இத்தொகுப்பு நூல் 594 பக்கங்கள் கொண்டது.[2][3]

மகாராஷ்டிர அரசு வெளியிட்ட அம்பேத்கர் நூல்களிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு, அம்பேத்கர் அறக்கட்டளை [4] வெளியிட்டுள்ள தமிழ் நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்நூல் இந்து சமயத்தின் புதிர்கள், பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், தீண்டாமை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.[5]

நூலின் உள்ளடக்கம்[தொகு]

இந்நூலின் முதல் பகுதியில் வேதங்களின் உள்ளடக்கமும், இரண்டாம் பகுதியில், பௌத்த சமயத்தின் வீழ்ச்சி குறித்தும், இந்து சமய இலக்கியங்களான பகவத் கீதை, வேதாந்த சூத்திரங்கள், மகாபாரதம், இராமாயணம், புராணங்கள் ஆகியவை குறித்தும், மூன்றாவது பகுதியில் தீண்டாமை குறித்தும் அம்பேத்கர் எழுதிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. விடியல் பதிப்பகம்
  2. புத்தகக் காட்சியில் ஒரு அரங்கத்தை தெரிஞ்சுக்கலாமா? - விடியல் பதிப்பகம்
  3. "புத்தகம்": மதம், சாதி குறித்த அம்பேத்கர் எழுத்துகளின் புதிய தொகுப்பு
  4. "Dr. Ambedkar Foundation". Archived from the original on 2018-01-15. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
  5. அம்பேத்கர் இன்றும் என்றும்