அம்பலநாதத் தம்பிரான் (காவை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காவை என்னும் ஊரில் வாழ்ந்த அம்பலவாணத் தம்பிரான் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப்பெரியார். கார்காத்த வேளாளர் குலத்தில் பிறந்தவர். காவை என்பது திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள 'காவனூர்' என்னும் ஊர். பழுதை கட்டி-சம்பந்த முனிவரின் மாணாக்கருள் ஒருவர். சீர்காழியில் வாழ்ந்த இந்தச் சம்பந்தரிடம் ஞானம் பெற்று அவர் சமாதி அடைந்த பின் தம் ஊருக்கு வந்து பல மாணாக்கர்களை உருவாக்கி அவர்களுடன் வாழ்ந்தார். அம்பலவாணத் தம்பிரானை 'அம்பலவாணர்' எனவும் அழைக்கப்பட்டார். இவரைக் காவை அம்பலநாதத் தம்பிரான் எனக் குறிப்பிடுவது வழக்கம். இவர் பாடிய சைவ நூல்கள் பல.

பிராசாத அகவல், சிவப்பிரகாசக் கொளு. சத்தி நிபாத அகவல், உருப சொரூப அகவல், முதலானவை குறிப்பிடத் தக்கவை.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005