அமேசான் கடலடிப் பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமேசான் கடலடிப் பாறைகளின் நிலப்படம். பிரேசில், பிரெஞ்சு கயானா மற்றும் சுரிநாம் கடலோரத்தில் அமைந்துள்ளது. முதன்மையான பாறை அமைப்புகள் ஆரஞ்சு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. (பெரிதாக்க சுட்டுக)

அமேசான் கடலடிப் பாறைகள் (Amazon Reef) [1] (சிலவிடங்களில் அமேசானியக் கடலடிப் பாறைகள் எனவும் குறிக்கப்படுகின்றன[2]) பிரெஞ்சு கயானா வடக்கு பிரேசில் கடலோரத்தில் அமைந்துள்ள விரிவான பவள, பஞ்சு கடலடிப் பாறையமைப்புகளாகும். உலகின் மிகப் பெரிய கடலடிப் பாறை அமைப்புகளில் ஒன்றாக இது அறியப்படுகின்றது. இந்த அமைப்பு 970 கிலோமீட்டர்கள் (600 மைல்கள்) நீளமுள்ளதாகவும் 9,300 km2 (3,600 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளதாகவும் புவியியலாளர்கள் மதிப்பிடுகின்றனர். இதனைக் கண்டறிந்தமைக்கான அறிவிக்கை ஏப்ரல் 2016இல் வெளியிடப்பட்டது; 2012இல் இப்பகுதியில் நடந்த கடலியல் ஆய்விற்குப் பிறகு இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டது. 1950களிலிருந்தே அமேசான் ஆற்றின் கழிமுகத்தில் இத்தகைய பெரிய பாறையமைப்பு இருப்பதற்கான சான்றுகள் கிடைத்தவாறிருந்தது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Huge coral reef discovered at Amazon river mouth". Guardian Media Group (April 23, 2016). பார்த்த நாள் April 23, 2016.
  2. "There's a Gigantic Reef Surrounding the Amazon River and Nobody Noticed". Gawker Media (April 22, 2016). பார்த்த நாள் April 23, 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேசான்_கடலடிப்_பாறை&oldid=2056284" இருந்து மீள்விக்கப்பட்டது