அமெரிக்க இயற்பியல் ஆய்விதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்க இயற்பியல் ஆய்விதழ் (American Journal of Physics) என்பது அமெரிக்க இயற்பியல் ஆசிரியர் கழகம், அமெரிக்க இயற்பியல் நிறுவனம் ஆகியவற்றால் வெளியிடப்படும் மாதாந்திர, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழாகும். கோல்கேட் பல்கலைக்கழகத்தின் பெத் பார்க்ஸ் இதன் தலைமைத் தொகுப்பாசிரியராவார்.[1][2][3][4][5]

நோக்கம் மற்றும் வாய்ப்பளவு[தொகு]

அமெரிக்க இயற்பியல் ஆய்விதழ் இளநிலை மற்றும் பட்டதாரி நிலையிலுள்ள இயற்பியல் தொடர்பான செய்திகளை முதன்மையாக வழங்குகிறது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இயற்பியல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதன் முதன்மை வாசகர்களாக உள்ளனர். இயற்பியலில் தற்போது நடைபெறும் ஆராய்ச்சிகள், அறிவுறுத்தல் ஆய்வக உபகரணங்கள், ஆய்வக விளக்கங்கள், கற்பித்தல் முறைகள், வளங்களின் பட்டியல்கள் மற்றும் புத்தக மதிப்புரைகள் ஆகியவை தொடர்பான செய்திகள் இதில் அடங்கும். கூடுதலாக, இயற்பியலின் வரலாற்று, தத்துவ மற்றும் கலாச்சார அம்சங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.[3] கிளாரிவேட்டின் 2021 ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இந்த இதழ் 2020-ன் தாக்கக் காரணி 1.022ஐக் கொண்டுள்ளது.[6]

வரலாறு[தொகு]

இந்த இதழின் முந்தைய பெயர் அமெரிக்க இயற்பியல் ஆசிரியர் (தொகுதி. 1, பிப்ரவரி 1933) பன்னாட்டுத் தர தொடர் எண் 0096-0322). இது 1933 முதல் 1936 வரை காலாண்டு இதழாகவும், பின்னர் 1937 முதல் 1939 வரை இருமாத இதழாகவும் வெளியானது. திசம்பர் 1939-ல் தொகுதி 7 வெளியிடப்பட்ட பிறகு, பிப்ரவரி 1940-ல் இதழின் பெயரானது இதன் தற்போதைய தலைப்பாக மாற்றப்பட்டது. எனவே, இதன் புதிய பெயரின் கீழ் பிப்ரவரி 1940-ல் தொகுதி 8 முதல் தொடங்குகிறது.[3][4][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Current Frequency: Monthly, 2002; and Former Frequency varies, 1940-2001" "Library catalog" (Online). Library of Congress. Aug 22, 2007. பார்க்கப்பட்ட நாள் 2011-01-24.
  2. Confirmation of Editor, ISSN, CODEN, and other relevant information. "Masthead" (PDF). American Association of Physics Teachers. 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
  3. 3.0 3.1 3.2 "About this journal". American Association of Physics Teachers. 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-01-24.Brief description of this journal.
  4. 4.0 4.1 "Library catalog" (accessed via World Cat). Wellesley College, Massachusetts. பார்க்கப்பட்ட நாள் 2011-01-24.Bibliographic information for this journal. Abstracting and indexing services are listed here. "v.8 (1940:Feb.)-v.36 (1968), v.59 (1991)"
  5. Wolfe, David. "Beth Parks to Become Next Editor of the American Journal of Physics". American Association of Physics Teachers (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-09.
  6. Journal Impact Factor. Journal Citation Reports™ from Clarivate, 2021.
  7. Information pertaining to the former title "The American Physics Teacher". Library catalog. National Library of Australia. http://catalogue.nla.gov.au/Record/1605343?lookfor=title:(American%20Journal%20of%20Physics)&offset=2&max=156448. பார்த்த நாள்: 2011-01-24. 

வெளி இணைப்புகள்[தொகு]