அமுதசுரபி (விடுதலைப் புலி)
Appearance
கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி | |
---|---|
கடற் கரும்புலி, லெப். கேணல் அமுதசுரபி | |
பிறப்பு | செம்பியன்பற்று தெற்கு, யாழ்ப்பாணம் |
இறப்பு | ஒக்டோபர் 26, 2001 முல்லைத்தீவு |
மற்ற பெயர்கள் | அல்பா |
பணி | கடற்புலிகளின் மகளிர் படையணித் துணைத் தளபதி. |
லெப். கேணல் அமுதசுரபி-அல்பா (இறப்பு: அக்டோபர் 26, 2001[1]) எனும் இயக்கப் பெயரைக்கொண்ட சின்னப்பு நந்தினி தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் மகளிர் படையணித் துணைத் தளபதியாக இருந்தவர்.
யாழ்ப்பாணம், செம்பியன்பற்று தெற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆளுமை மிக்கதொரு பெண் போராளியாக இருந்தவர். பெண்களுக்கென விதிக்கப்பட்ட சில வரைமுறைகளிலிருந்து வெளிவரத் தயங்கிய பெண்களுக்குத் தைரியமூட்டி அவர்களையும் கடலில் இறக்கிப் பயிற்சிகள் கொடுத்து திறமை மிக்க போராளிகளாக வளர்த்தெடுத்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்". பதிவு. அக்டோபர் 26, 2012 இம் மூலத்தில் இருந்து 2012-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121225084526/http://www.pathivu.com/news/22456/57/11.aspx. பார்த்த நாள்: 15 மார்ச் 2015.