அமீர் இப்னு லுகாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமீர் இப்னு லுகாய், முகமது நபியின் வரலாற்று நூலான "ரஹீக் அல்-மக்தூம்" என்ற புகழ்பெற்ற புத்தகத்தில், அரேபியா நாட்டில் சிலை வழிபாடு தொடங்கிய கதையை குறித்துள்ளது.[1][2]இப்றாகீம் (ஆபிரகாம்) மற்றும் இஸ்மாயில் காலத்திற்குப் பின்னர், காலப்போக்கில் ஒரே கடவுள் எனும் ஏகத்துவ நம்பிக்கையிலிருந்து மக்கள் விலகத் தொடங்கினர்.

அரேபிய தீபகற்பத்தில் அம்ர் குஜா பழங்குடியினரின் தலைவராக இருந்த அம்ர் இப்னு லுஹாய் என்ற வணிகர், மெசொப்பொத்தேமியா மற்றும் சிரியா பகுதிகளில் மக்கள் சிலைகளை வழிபடுவதைக் கவனித்தார். அமீர் இப்னு லுகாய் ஹுபல் எனும் கடவுள் சிலையை மக்காவில் உள்ள கஃபாவின் நடுவில் வைத்து வழிபட்டார். மேலும் தனது பழங்குடியினருக்கும் அவ்வாறு வழிபட அறிவுறுத்தினார். இறுதியில் அரேபியாவில் ஹுபல் கடவுளின் சிலை வழிபாடு முழு அளவில் நடைமுறைக்கு வந்தது. இறுதியில் இச்சிலை வழிபாடு, செங்கடலுக்கு அருகிலுள்ள ஹெஜாஸ் பகுதியில் உள்ள தைஃப் நகரத்தில் அல்-லாத், மனாத் மற்றும் அல்-உஸ்ஸா போன்ற பெண் கடவுளர்களின் சிலை வழிபாடுகளுக்குப் பிரபலமானது. காலப்போக்கில் பெரும்பாலான அரேபிய மக்களின் வீடுகளிலும், பிற வழிபாட்டுத் தலங்களிலும் சிலை வழிபாடுகள் பெருகத் தொடங்கியது.

கிபி ஏழாம் நூற்றாண்டில் முகமது நபி மக்காவைக் கைப்பற்றிய போது கஃபாவைச் சுற்றியிருந்த 360 சிலைகள் உடைத்து தகர்ப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

பண்டைய அரேபியப் பெண் கடவுளர்கள்:

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீர்_இப்னு_லுகாய்&oldid=3860971" இலிருந்து மீள்விக்கப்பட்டது