அமிதா மனதுங்கா
அமிதா கல்யாணி மனதுங்கா (Amita Kalyanie Manatunga) இலங்கை நாட்டைச் சேர்ந்த உயிரியற் புள்ளியல் நிபுணர் ஆவார். எமோரி பல்கலைக்கழகத்துடன் இணைந்த ரோலின்சு பொது சுகாதாரப் பள்ளியில் [1]:{{{3}}} உயிரியற் புள்ளியியல் மற்றும் உயிரியற் தகவலியல் பாடங்களின் பேராசிரியராக இவர் பணிபுரிகிறார். அமிதா இங்கு வின்சிப் புற்றுநோய் நிறுவனத்துடனும் இணைந்து செயல்படுகிறார்.[2]:{{{3}}} பலதரப்பட்ட உயிர்வாழும் தரவு மற்றும் உடன்பாட்டை மதிப்பிடுவது இவரது முறையான ஆராய்ச்சி ஆர்வமாகும். இம்மதிப்பீடு பெரும்பாலும் உயிரியல் மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் மேலும் இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் இடை - மதிப்பீட்டு நம்பகத்தன்மை, சுற்றுச்சூழல் தொற்றுநோய் மற்றும் சிறுநீரகங்களின் மருத்துவ படமெடுத்தல் போன்றவற்றின் பக்கம் இருந்தன.[1]:{{{3}}} தற்போது அமிதா இனப்பெருக்க/சுற்றுச்சூழல் தொற்றுநோயியல் மற்றும் அணு மருத்துவ ஆய்வுகளில் சிறுநீரகப் படங்களின் விளக்கம் கொடுத்தல் போன்றவற்றில் ஆழமாக ஈடுபட்டுள்ளார். கூடுதலாக இவர் மன ஆரோக்கியம், மனச்சோர்வை கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
கல்வி மற்றும் தொழில்
[தொகு]இலங்கையிலுள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1978 ஆம் ஆண்டு அமிதா மனதுங்கா முதல் வகுப்பில் ஆனர்சு பட்டம் பெற்றார். 1984 ஆம் ஆண்டு பெர்து பல்கலைக்கழகத்திலும் 1986 ஆம் ஆண்டு ரோசெசுட்டர் பல்கலைக் கழகத்திலும் படித்து புள்ளியியலில் இவர் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1]:{{{3}}}[2]:{{{3}}} 1990 ஆம் ஆண்டு அமிதா ரோசெசுட்டர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். அவரது ஆய்வுக் கட்டுரை, நிலையான பலவீனங்களால் உருவாக்கப்பட்ட பன்முக உயிர்வாழ்வு விநியோகங்களுக்கான அனுமானம், என்ற தலைப்பில் இவருடைய முனைவர் பட்ட ஆய்வறிக்கை அமைந்தது. டேவிட் ஓக்சு முனைவர் பட்டத்திற்கான வழிகாட்டியாக மேற்பார்வையிட்டார்.[3]:{{{3}}}
முனைவர் பட்டத்தை முடித்த பிறகு, இந்தியானா பல்கலைக்கழகத்தின் உயிரியற் புள்ளியியல் பிரிவில் உதவிப் பேராசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1994 ஆம் ஆண்டில் எமோரி பல்கலைக்கழகத்தில் பதவிக் கால உதவிப் பேராசிரியராக அமிதா சேர்ந்தார்.[1]:{{{3}}} 2004 ஆம் ஆண்டு எமோரியில் முழுப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். எமோரியில், நீண்ட கால மற்றும் அடிக்கடி இணைகின்ற மற்ற இரண்டு பெண்களுடன் இணைந்து உயிரியியல் புள்ளியியலாளராக பணியாற்றுகிறார். லிமின் பெங் மற்றும் அவரது முன்னாள் மாணவர் யிங் குவோ ஆகிய இருவரும்தான் மற்ற இரண்டு பெண்களாவர்.[4]:{{{3}}}
எமோரிக்கு வந்ததிலிருந்து, எமோரி பல்கலைக்கழக பொது மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் முதன்மை உயிரியற் புள்ளியியலாளராக வேலை செய்கிறார். மனநலம், இருதயவியல் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட மருத்துவ ஆய்வுகளில் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். தொடக்கத்தில் இவர் உயர் இரத்த அழுத்தத்தில் நீண்ட ஆய்வுகளின் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வில் ஆராய்ச்சியாளர்களுடன் விரிவாக ஒத்துழைத்தார்.
எமோரியில் மாணவர்களுக்கு உயிரியற் புள்ளியியல் அறிமுகம், நேரியல் மாதிரிகள் கோட்பாடு, புள்ளியியல் அனுமானம், உயிர் பகுப்பாய்வு மற்றும் நீளமான தரவு உள்ளிட்ட பல்வேறு முனைவர் பட்ட பட்டதாரி நிலை படிப்புகளை கற்பித்தார். மேலும் மருத்துவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உயிரியல் ஆய்வுகளில் குறுகிய படிப்புகளை இயக்குநராக இருந்து இயக்கியுள்ளார். முதுநிலை மருத்துவ ஆராய்ச்சி திட்டத்தின் ) செயற்குழுவில் அமிதா ஈடுபடுகிறார்.
அங்கீகாரம்
[தொகு]அமிதா மனதுங்கா 2004 ஆம் ஆண்டு அமெரிக்க புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]:{{{3}}}
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Amita Manatunga, Professor, Rollins School of Public Health, பார்க்கப்பட்ட நாள் 2018-10-14
- ↑ 2.0 2.1 Amita Manatunga, PhD, Winship Cancer Institute, பார்க்கப்பட்ட நாள் 2018-10-14
- ↑ கணித மரபியல் திட்டத்தில் அமிதா மனதுங்கா
- ↑ McKenzie, Martha (October 9, 2017), "Trio in biostatistics: 'Role models for us all'", Emory News Center, Emory University, பார்க்கப்பட்ட நாள் 2018-10-14
- ↑ ASA Fellows list, American Statistical Association, archived from the original on 2017-12-01, பார்க்கப்பட்ட நாள் 2018-10-14