உள்ளடக்கத்துக்குச் செல்

அமராவதி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ராவதி விரைவுவண்டி என்ற பெயரில் மற்றொரு வண்டி இயக்கப்படுகிறது.
17225/17226 அமராவதி விரைவுத் தொடருந்தின் வழித்தடம் (விஜயவாடா- ஹூப்ளி)
18047/18048 அமராவதி விரைவுத் தொடருந்தின் வழித்தடம் (ஹௌரா-வாஸ்கோ)

அமராவதி எக்ஸ்பிரஸ் இந்திய ரயில்வேக்கு உட்பட்ட தொடர்வண்டி ஆகும். இது இரு வழித் தடங்களில் இயங்குகிறது.

முதல் தடம்

[தொகு]
  1. 17225 என்ற வண்டி எண்ணுடன் விஜயவாடா – ஹூப்ளி வழித் தடத்தில் இயங்குகிறது.
  2. 17226 என்ற வண்டி எண்ணுடன் ஹூப்ளி - விஜயவாடா வழித் தடத்தில் இயங்குகிறது.

இந்த வண்டி இரு தடங்களிலும் வாரத்திற்கு மூன்று முறை செயல்படும். இந்த வண்டியை தென்னக ரயில்வேயின் ஒரு பிரிவான விஜயவாடா ரயில்வே கோட்டம் இயக்குகிறது. இதன் ரேக்கினை 17208/17207 வண்டியுடன் பகிர்ந்துகொள்கிறது.[1]

இரண்டாவது தடம்

[தொகு]

இந்த வண்டி ஆந்திரப் பிரதேசம் முதல் கோவா வரை பயணிக்கிறது.[2]

  1. 18047 என்ற வண்டி எண்ணுடன் ஹவுரா – வாஸ்கோடாகாமா வழித் தடத்தில் இயங்குகிறது.
  2. 18048 என்ற வண்டி எண்ணுடன் வாஸ்கோடகாமா – ஹவுரா வழித் தடத்தில் இயங்குகிறது.

இந்த வண்டி வாரத்திற்கு நான்கு முறை பயணிக்கிறது. விஜயவாடா, குண்டக்கல், ஹூப்ளி, மட்காவ் ஆகிய வழித்தடங்களின் வழியே செல்கிறது. இது தென்கிழக்கு ரயில்வேயின் ஒரு பிரிவான கரக்பூர் ரயில்வேயினால் இயக்கப்படுகிறது. பேன்ட்ரி கார் வசதிகள் இந்த ரயில்சேவையில் இல்லை. கேட்டரிங் உணவுச் சேவைகள் அளிக்கப்படுகின்றன.[3]

இடங்கள்

[தொகு]

குண்டூர், நரசாராவுபேட்டை, கம்பம், நந்தியால், மகாநந்தி, குண்டக்கல், பெல்லாரி ஆகிய பகுதிகளைச் சுற்றிய இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பயன்படுகிறது.

பெயர் தோற்றம்

[தொகு]

சாதவாகன வம்சத்தினரின் தலைநகரின் நினைவாக அமராவதி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அமராவதி என்னும் நகரம் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது. அமராவதியிலுள்ள விகாரைகளினால் ’தென்னிந்தியாவின் சாஞ்சி’ என்றழைக்கப்படுகிறது.

வழித்தட அட்டவணை

[தொகு]

அமராவதி விரைவுவண்டியின் வழித்தட விவரங்கள் அடங்கிய அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது[4].

எண் நிலையத்தின் பெயர் (குறியீடு) வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம்
(நிமிடங்கள்)
கடந்த தொலைவு
(கி.மீ)
நாள் பாதை
1 ஹூப்ளி சந்திப்பு (UBL) தொடக்கம் 12:15 0 0 1 1
2 அண்ணிகேரி (NGR) 12:54 12:55 1 36 1 1
3 கதக் சந்திப்பு (GDG) 13:18 13:20 2 59 1 1
4 கொப்பால் (KBL) 14:01 14:02 1 116 1 1
5 முனிராபாது (MRB) 14:27 14:28 1 138 1 1
6 ஹொஸ்பேட் சந்திப்பு (HPT) 14:48 14:50 2 144 1 1
7 டோரானகல்லு (TNGL) 15:29 15:30 1 176 1 1
8 பெல்லாரி சந்திப்பு (BAY) 16:18 16:20 2 209 1 1
9 குண்டக்கல் சந்திப்பு (GTL) 17:10 17:25 15 259 1 1
10 மத்திகேரா (MKR) 17:39 17:40 1 271 1 1
11 பென்டேகல்லு (PDL) 18:04 18:05 1 302 1 1
12 டோன் (துரோணாச்சலம்) (DHNE) 18:38 18:40 2 328 1 1
13 பெடாம்செர்லா (BMH) 19:12 19:13 1 364 1 1
14 பி சிமெண்ட் நகர் (BEY) 19:21 19:22 1 370 1 1
15 நந்தியால் (NDL) 20:20 20:25 5 404 1 1
16 கித்தலூர் (GID) 21:15 21:16 1 457 1 1
17 கம்பம்(CBM) 21:44 21:45 1 491 1 1
18 தருலபுடு (TLU) 22:04 22:05 1 504 1 1
19 மார்கபூர் சாலை (MRK) 22:14 22:15 1 517 1 1
20 டோனகோண்டா(DKD) 22:45 22:46 1 541 1 1
21 குரிச்சேடு (KCD) 23:05 23:06 1 554 1 1
22 வினுகொண்டா(VKN) 23:27 23:28 1 578 1 1
23 நரசராவுபேட்டை (NRT) 00:10 00:11 1 616 2 1
24 குண்டூர் சந்திப்பு (GNT) 01:40 02:00 20 661 2 1
25 விஜயவாடா சந்திப்பு (BZA) 02:50 00:00 1270 693 2 1
26 குண்டக்கல் சந்திப்பு (GTL) 17:10 22:10 300 259 1 2
27 கர்னூல் நகரம் (KRNT) 00:37 00:39 2 81 2 2
28 கத்வால் (GWD) 01:42 01:43 1 437 2 2
29 மஃகபூப்நகர் (MBNR) 02:50 02:52 2 512 2 2
30 ஷாத்நகர் (SHNR) 03:44 03:45 1 566 2 2
31 கச்சிகுடா (KCG) 05:00 முடிவு 0 617 2 2

குறிப்புகள்

[தொகு]
  1. "Amaravati Express -17225". Indiarailinfo.com.
  2. "Amaravati Express". Hampi.in.
  3. "Howrah Junction To Vasco-Da-Gama". Indiarailinfo.com.
  4. "Amaravati Express-17226". cleartrip.com. Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதி_விரைவுவண்டி&oldid=3759949" இலிருந்து மீள்விக்கப்பட்டது