அப்புரி சாயாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்புரி சாயாதேவி (Abburi Chayadevi 13 அக்டோபர் 1933 ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி [1] - 28 ஜூன் 2019 ஐதராபாத்து, தெலங்கானா ) என்பவர் தெலுங்கு இந்திய புனைகதை எழுத்தாளர் ஆவார். டானா மார்கம் எனும் (சிறுகதைகள்) படைப்பிற்காக 2005 ஆம் ஆண்டு தெலுங்கு மொழிக்கான சாகித்திய அகாதமி விருது வென்றார். [2][3]

சுயசரிதை[தொகு]

சாயா தேவி 1950களில் இலக்கிய வட்டங்களில் தீவிரமாக பங்காற்றினார், 70 களிலும், இவர் ஒரு படைப்பு பெண்ணிய எழுத்தாளராக அறியப்பட்டார். இவர் ஜெர்மன் புனைகதைகளையும் மொழிபெயர்த்தார். இவரது கதைகள் பல இந்திய மொழிகள் மட்டுமல்லாது ஆங்கிலம் மற்றும் இசுப்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [4] இவர் 1960களில் புது தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நூலகராகப் பணியாற்றினார். [5]

இவர் சாகித்ய அகாதமியின் (1998-2002) சபை உறுப்பினராக இருந்தார். [6]

சாயதேவியின் கணவர், அப்புரி வரதராஜேஸ்வர ராவ், எழுத்தாளர், விமர்சகர் மற்றும் அதிகாரப்பூர்வ மொழி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.

இவர், காதல் மற்றும் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முன்னோடியாக இருந்த அப்புரி ராமகிருஷ்ண ராவின் மருமகளும் ஆவார்.

படைப்புகள்[தொகு]

 • அனகா அனகா (குழந்தைகளுக்கான நாட்டுப்புறக் கதைகள்)
 • அப்புரி சாயா தேவி கதலு (சிறுகதைகள்), 1991
 • மிருத்யுஞ்சயா (நீண்ட கதை), 1993 [4]
 • டானா மார்கம் (சிறுகதைகள்-குடும்பப் பிணைப்புகள் என்ற போர்வையில் பெண்கள் சுரண்டப்படுவது பற்றி. [2]
 • மன ஜீவதலு-ஜிது கிருஷ்ணமூர்த்தி வ்யாகனலு -3 (மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) [7]
 • பரிச்சிதா லேகா ஒரு புராணக்கதையாக வெளியிடப்பட்டது (ஆஸ்திரிய எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்வேக்கின் கதைகளின் மொழிபெயர்ப்பு) [8]
 • பொன்சாய் படுகுலு [பொன்சாய் லைவ்ஸ்] குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இயந்திரத்தனமாக வாழும் பெண்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது.

விருதுகள்[தொகு]

 • ரங்கநாயக்கம்மா பிரதிபா புராஸ்காரம், 2003
 • தெலுங்கு பல்கலைக்கழக விருது, 1996
 • 2005 ஆம் ஆண்டிற்கான தெலுங்கில் சாகித்ய அகாடமி விருது [2]

சான்றுகள்[தொகு]

 1. Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126008735. https://books.google.com/books?id=QA1V7sICaIwC&q=Abburi+Chayadevi&pg=PA242. 
 2. 2.0 2.1 2.2 Sahitya Akademi Awards 2005 - General Information - Know India: National Portal of India பரணிடப்பட்டது 22 செப்டம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம்
 3. "Sahitya Akademi award for Abburi Chaya Devi". The Hindu. 23 December 2005. https://www.thehindu.com/2005/12/23/stories/2005122319170200.htm. பார்த்த நாள்: 6 October 2018. 
 4. 4.0 4.1 Women's Writing
 5. "Sahitya Akademi award for Abburi Chaya Devi". The Hindu. 23 December 2005. https://www.thehindu.com/2005/12/23/stories/2005122319170200.html. பார்த்த நாள்: 6 October 2018. 
 6. Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126008735. https://books.google.com/books?id=QA1V7sICaIwC&q=Abburi+Chayadevi&pg=PA242. 
 7. "KANNADA". The Hindu. 8 February 2011. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-bookreview/KANNADA/article15132578.ece. பார்த்த நாள்: 6 October 2018. 
 8. "Welcome to Muse India". 4 March 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்புரி_சாயாதேவி&oldid=3117223" இருந்து மீள்விக்கப்பட்டது