அபு நுவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அபு நுவாஸ், கலீல் ஜிப்ரான் வரைந்த படம். அல்-புனுன் 2, நம். 1 (ஜூன் 1916)

அபு நுவாஸ் என அறியப்பட்ட அபு நுவாஸ் அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி (750-810) என்பவர், அக்காலத்தில் மிகப் புகழ் பெற்ற அராபிய, பாரசீக மொழிக் கவிஞர்களில் ஒருவராவார். பாரசீகத்தில், அஹ்வாஸ் என்னும் நகரில் பிறந்த இவர் அராபு-பாரசீக வழியைச் சேர்ந்தவராவார். இவர் அரபு மொழிக் கவிதைகளின் எல்லா வகைகளையும் கையாளக் கூடிய திறமை பெற்றிருந்தார். நாட்டார் மரபில் ஈடுபட்ட இவர் ஆயிரத்தொரு இரவுகள் நூலில் பல தடவைகள் இடம்பெற்றுள்ளார்.

இவருடைய தந்தையார் ஹனி இரண்டாம் மர்வானின் படையில் ஒரு போர்வீரனாக இருந்தார். அபு நுவாஸ் இவரைக் கண்டதில்லை. பாரசீகப் பெண்ணான இவரது |தாயார் கோல்பான் ஒரு நெசவாளராகப் பணி புரிந்து வந்தார். அபு நுவாசின் வரலாறுகள், அவரது பிறந்த ஆண்டு குறித்து, 747 க்கும், 762 க்கும் இடையில் வேறுபடுகின்றன. சிலர் இவர் டமாஸ்கஸ் நகரில் பிறந்ததாகக் கூறுகின்றனர். வேறு சிலர் இவர் பிறந்த இடம் பஸ்ரா என்று கூற இன்னும் சிலர் அஹ்வாஸ் என்கின்றனர். இவருக்கு இடப்பட்ட பெயர் அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி. அபு நுவாஸ் என்பது இவரது பட்டப் பெயர். இப் பெயர் குடுமியின் தந்தை என்னும் பொருள் கொண்டது. இவரது தலையிலிருந்து தோள்வரை தொங்கிய பக்கக் குடுமிகளைக் குறித்தே இப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_நுவாஸ்&oldid=2240479" இருந்து மீள்விக்கப்பட்டது