அபிலாஷா பராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபிலாஷா பராக், ஹரியானாவைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரியாவார். சென்னை அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தில் பயிற்சி பெற்றுள்ள இவர்,2022ல் இந்திய ராணுவத்தில் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார். மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள போர் ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில் தனது ஒரு வருடப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார். [1] [2] [3] [4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பராக், அரியானாவை சேர்ந்த ஓய்வு பெற்ற கர்னல் எஸ் ஓம் சிங்கின் மகளாவார். [5] [6] தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பிரிவில் 2016 ஆம் ஆண்டில் தனது பொறியாளர் பட்டப்படிப்பை முடித்துள்ள அபிலாஷா, இந்திய விமானப்படையில் பல்வேறு பெருமைகளையும் சாதனைகளையும் படைத்துள்ளார். செப்டம்பர் 2018 இல் ராணுவ விமானப் பாதுகாப்புப் படையில் பணியமர்த்தப்பட்டார். [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Army gets first woman combat pilot in Capt. Abhilasha Barak". May 25, 2022 – via www.thehindu.com.
  2. "26-year-old Abhilasha Barak from Haryana becomes Indian Army's first woman combat aviator". May 26, 2022.
  3. Negi, Manjeet (May 25, 2022). "Capt Abhilasha Barak becomes Indian Army's first woman combat aviator". India Today.
  4. "Army: Rohtak girl joins as Indian Army's first woman combat aviator | India News – Times of India". The Times of India.
  5. "Captain Abhilasha Barak first woman combat aviator in army". Hindustan Times. May 26, 2022.
  6. "Meet Captain Abhilasha Barak, First Woman Combat Pilot In Army Aviation". NDTV.com.
  7. "Meet Captain Abhilasha Barak, Indian Army's First Woman Combat Aviator". IndiaTimes (in Indian English). 2022-05-26. பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிலாஷா_பராக்&oldid=3934976" இலிருந்து மீள்விக்கப்பட்டது