அபிலாசா குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிலாசா குப்தா
மாநகரத் தந்தை-பிரயாக்ராஜ்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2012
முன்னையவர்ஜித்தேந்திர நாத் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நந்த கோபால் குப்தா (தி. 1995)

அபிலாசா குப்தா நந்தி (Abhilasha Gupta) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[1] 2012-2023 வரை அலகாபாத் மாநகராட்சி தந்தையாக இருந்தார்.[2]

அபிலாசா 7 சூலை 2012 அன்று மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் நபர் இவரானார். 2012 மாநகராட்சித் தேர்தலில், இவர் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரான பாஜகவின் கமலா சிங்கை தோற்கடித்தார்.[4] இவர் நந்த கோபால் நந்தியை மணந்தார்.[5][6]

2012ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் மாதிரி நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் வழக்கில் இவர் 14 பிப்ரவரி 2014[7] அன்று கைது செய்யப்பட்டார்.[8] பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்திருந்த அபிலாசா மற்றும் இவரது கணவர் நந்த கோபால் நந்தி ஆகியோர் 2012ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் வழக்கில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மார்ச், 2014-இல் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர்.[9]

இவர் தனது கணவர் நந்த கோபால் நந்தியுடன் சனவரி 2017-இல் பாஜகவில் சேர்ந்தார்.

மீண்டும் 2017-இல நடைபெற்ற மாநகரத் தேர்தலில் குப்தா தனது பதவியைத் தக்கவைக்க, தனது நெருங்கிய போட்டியாளரான சமாஜ்வாதி கட்சியின் வினோத் துபேயை 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Abhilasha Gupta gets elected to the post of Allahabad Mayor". http://www.ndtv.com/article/cities/abhilasha-gupta-gets-elected-to-the-post-of-allahabad-mayor-240634. 
  2. "Mayor of the city". http://www.indianexpress.com/news/shot-in-arm-for-nandi-as-wife-wins-allahabad-mayoral-election/971767/%20Shot%20in%20arm%20for%20Nandi%20as%20wife%20wins%20Allahabad%20mayoral%20election. 
  3. "Allahabad Nagar Nigam : Governing Body" இம் மூலத்தில் இருந்து 21 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110721151600/http://allahabadnagarnigam.in/english/governingbody.htm. 
  4. "Abhilasha Gupta gets elected to the post of Allahabad Mayor". http://post.jagran.com/Abhilasha-Gupta-gets-elected-to-the-post-of-Allahabad-Mayor-1341671866. 
  5. "Shot in arm for Nandi as wife wins Allahabad mayoral election". http://archive.indianexpress.com/news/shot-in-arm-for-nandi-as-wife-wins-allahabad-mayoral-election/971767/. 
  6. "Now Nandi & Abhilasha" இம் மூலத்தில் இருந்து 14 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714230157/http://activeindiatv.com/component/content/article/97-allahabad/18323-now-nandi-a-abhilasha. 
  7. "Allahabad mayor arrested for violating code, cries foul". CanIndia. 14 February 2014 இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714114940/http://www.canindia.com/2014/02/allahabad-mayor-arrested-for-violating-code-cries-foul/. 
  8. "Allahabad Mayor held". 15 February 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/allahabad-mayor-held/article5691562.ece. 
  9. "BSP leader, his mayor wife expelled from party: may join BJP". 11 March 2014 இம் மூலத்தில் இருந்து 11 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190711095528/https://news.webindia123.com/news/Articles/India/20140311/2355486.html. 
  10. Hindustan Team (2 December 2017). "BJP Mayor Candidate Abhilasha Gupta Wins by 63,000 Votes". பார்க்கப்பட்ட நாள் 17 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிலாசா_குப்தா&oldid=3890462" இலிருந்து மீள்விக்கப்பட்டது