உள்ளடக்கத்துக்குச் செல்

அபாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓமானில் உள்ள ஒரு கடற்கரையில் மூன்று பெண்கள் அபாயத் அணிந்துகொண்டு நடக்கிறார்கள்.
இரண்டு பெண்கள் அபாயத்தும் நிகாபும் அணிந்துள்ளனர். அபாயா ஆடை மற்றும் நிகாப் முகம் மறைத்தல் ஆகும்.

அபாயா (abaya) என்பது ஒரு “தளர்த்தியான மேலங்கி” (பேச்சு முறையிலும், பொதுவாகவும் அரபு மொழி: عباية‎ அபாயா, குறிப்பாக இலக்கண அரபு:عباءة, அபாஅ,  பன்மை:عبايات, அபாயத், عباءات அபாஅத்), சிலவேளை அபாயா எனப்படுவது எளிமையானதும், தளர்த்தியானதுமான மேலங்கியாகும். முக்கியமாக ஒரு பிரத்தியேக ஆடை, வட ஆபிரிக்கா, அரேபிய தீபகற்ப நாடுகள் உள்ளடங்களாக உலகளாவிய முஸ்லிம் பெண்களால் அணியப்படுகிறது.[1] மரபு ரீதியாக அபாயத் கறுப்பு நிறத்திலும், தோற்புயம் முதல் கரண்டைக்கால் வரை நீளமானதாகவும் இருக்கும். அபாயாவானது முகம், மனிக்கட்டுக்கை, பாதம் தவிர்ந்த முழு உடலையும் மறைக்கக்கூடியது. அது நிகாபுடனும் அணியப்படக்கூடியது, நிகாப், கண்களைத்தவிர முகத்தை மறைக்கும் முகத்திரை. சில பெண்கள் நீளமான கறுப்புக் கையுறைகளையும் அணிவதால் அவர்களுடைய கைகளும் மறைக்கப்படும்.

இந்தோனேசியா, மலேசியா பெண்கள் அணியும் மரபு ரீதியான ஆடை "கெபாயா" எனப்படுவதும் அபாயாவாகும்.

அடிப்படைக் காரணம்

[தொகு]

குர்ஆனில் ஒரு வசனம் "ஓ நபியே, உங்கள் மனைவிமாருக்கும், மகள்மாருக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவர்கள் தங்கள் முந்தானைகளை தங்கள் மீது தொங்கவிட்டுக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இதுவே சுலபமான வழியாகும்." குர்ஆன் 33:59[2] (அஹ்மத் அலியினால் மொழிபெயர்க்கப்பட்டது), இது அபாயா அணிவதற்கான வாதமாகக் கொள்ளப்படுகிறது.

அபாயாவானது பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பொதுவான ஆடையாகும். உடம்பின் முகம், கை தவிர ஏனைய யாவும் அவ்ரத் ஆகும். (அவ்ரத்: இரத்த உறவு, திருமண உறவு அல்லாத ஆண்களிடமிருந்து மறைக்கும் உடம்பின் பகுதி).

நாடுகள்

[தொகு]

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அரபு நாடுகள் இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் எல்லோராலும் அணியப்படுவது இல்லை. 1979 இல் ஈரானில் இஸ்லாமிய ஆட்சி வந்ததன் பின் பெண்கள் உடலையும், தலையையும் மறைக்க வேண்டியேற்பட்டது. "Chador" எனும் ஓர் ஆடையே அவர்களால் அணியப்பட்டது, இது முகத்தை மறைக்காது என்றாலும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களாகவே காணப்பட்டார்கள். ஏனைய பெண்கள் வர்ணங்களாக வித்தியாசமாக அணிவார்கள்.

மத்திய கிழக்கு

[தொகு]

சவுதி அரேபியாவில், பெண்கள் பொது இடங்களில் தங்களை முழுமையாக மறைத்துக்கொள்வது அவசியமாகும்.[3] தெற்காசியாவில் இதற்கு சமமான ஆடை புரூக்கா ஆகும்.

நவீனங்கள்

[தொகு]

அபாயா வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நோக்கம் ஒன்று, அது மறைப்பது தான். தற்கால மாதிர்கள் பொதுவாக caftans (caftans: crepe, பட்டு, மென்பட்டு போன்ற பாரமில்லாத விழுந்து நிற்கக்கூடிய துணிகளில் இருந்து வெட்டப்படுவது). ஏனைய அபாயா நவீனங்கள் முன் திறந்த மற்றும் முன் மூடிய அபாயா எனப்படும். இது இடத்திற்கிடம் வேறுபடுகின்றது: சில அபாயத் கறுப்புத் துணி மீது தையல் வேலைகள் கொண்டவை அதேவேளை ஏனையவை பிரகாசமான நிறமுடைய மற்றும் வெவ்வேறு வடிவங்களிலாலான கலைப்படைப்புகள் கொண்டவை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Yarwood, Doreen (1978). The Encyclopedia of World Costume. New York: Bonanza Books. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-517-61943-1.
  2. "Center for Muslim-Jewish Engagement". Usc.edu. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22.
  3. Sanders, Eli. Interpreting veils: Meanings have changed with politics, history. The Seattle Times. 27 May 2003. Web. 30 Oct. 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபாயா&oldid=3920893" இலிருந்து மீள்விக்கப்பட்டது