அபாத்து நியூக்ளியசு பேரங்காடி

ஆள்கூறுகள்: 9°56′22″N 76°19′52″E / 9.93944°N 76.33111°E / 9.93944; 76.33111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபாத்து நியூக்ளியசு பேரங்காடி
அபாத்து நியூக்ளியசு பேரங்காடி
Abad Nucleus Mall
இருப்பிடம்:கொச்சி, இந்தியா
அமைவிடம்9°56′22″N 76°19′52″E / 9.93944°N 76.33111°E / 9.93944; 76.33111
முகவரிதேசிய நெடுஞ்சாலை 85, மரது, கொச்சி
திறப்பு நாள்2010
உருவாக்குநர்அபாத்து கட்டுனர்கள்
கட்டிடக் கலைஞர்அபாத்து கட்டிடக் கலைஞர்கள்
கடைகள் எண்ணிக்கை66
கூரை எண்ணிக்கை4
மொத்த வணிகத் தளப் பரப்பளவு125,000 சதுர அடிகள் (11,600 m2)[1][2]
தள எண்ணிக்கைG + 3
வலைத்தளம்nucleusmall.in

அபாத்து நியூக்ளியசு பேரங்காடி (Abad Nucleus Mall) கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகமாகும். வளரும் புறநகர்ப் பகுதியான மரதுவில், திருப்புனித்துராவிற்கு அருகில் நகர மையத்திற்கு அருகில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொச்சியிலுள்ள பிரபலமான அபாத்து [1] கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டு பேரங்காடி நிர்வகிக்கப்படுகிறது. 1.25 இலட்சம் மொத்த குத்தகை (சில்லறை) வருவாய் தரும் இடம் உட்பட மொத்தம் 2.3 லட்சம் சதுர அடியில் பேரங்காடி கட்டப்பட்டுள்ளது.[1][3] 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று 3 தளங்களில் பேரங்காடி திறக்கப்பட்டது.[2] இந்தியாவின் முதல் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் தலைமை அமைப்பு சான்றளிக்கப்பட்ட தங்கம் தரமதிப்பீடு செய்யப்பட்ட பேரங்காடி அபாத்து நியூக்ளியசு பேரங்காடியாகும்.[4] 2012 ஆம் ஆண்டிற்கான தென்னிந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வணிகத் திட்டப் பிரிவிலும் இப்பேரங்காடி விருது பெற்றது.

பொழுதுபோக்கு அம்சங்கள்[தொகு]

  • நவீன முறையில் இயக்கப்படும் 168 மற்றும் 132 இருக்கைகள் கொண்ட 2 திரை பல்காட்சி திரைகள்
  • 7500 சதுர அடியில் விளையாட்டிட மண்டலம்.
  • 24 இருக்கைகள் கொண்ட 6 பரிமாண திரையரங்கம். இந்தியாவில் இத்தகைய முதல் திரையரங்கு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Green mall opens at Maradu". பார்க்கப்பட்ட நாள் 2016-08-19.
  2. 2.0 2.1 "For that plush shopping experience - The Hindu". தி இந்து.
  3. "Nucleus mall, Kochi to become operational in August'10". Archived from the original on 13 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2010-09-17.
  4. "Nucleus Mall, Kochi to be operate from September'10 : Trade Kerala Article". Archived from the original on 7 November 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-09-17.