அபர்ணா இக்கின்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபர்ணா இக்கின்சு (Aparna Higgins) ஓர் இந்தியக் கணிதவியலாளர் ஆவார். இவர் கணித ஆராய்ச்சியில் பங்கேற்க இளநிலை கணிதவியலாளர்களை ஊக்குவிப்பதற்காக அறியப்பட்டவர்.[1]:{{{3}}} இக்கின்சு முதலில் உலகளாவிய இயற்கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றவர். ஆனால் இவரது சமீபத்திய ஆராய்ச்சி வரைபடக் கூழாங்கல் மற்றும் வரி வரைபடங்கள் உட்பட வரைபடக் கோட்பாட்டைப் பற்றியது.[2]:{{{3}}} இவர் டேட்டன் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக உள்ளார்.[3]:{{{3}}}

கல்வியும் பணியும்[தொகு]

இக்கின்சு இந்தியாவின் மும்பையைச் சேர்ந்தவர், மேலும் மும்பை பல்கலைக்கழகத்தில் இளநிலைப் படிப்பை 1978-இல் முடித்தார்.[2]:{{{3}}} இவர் முனைவர் பட்டத்தினை 1983-இல் நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தில் வரிசைப்படுத்தப்படாத இயற்கணிதங்களுடன் தொடர்புடைய பன்முக இயற்கணிதங்கள், உலகளாவிய இயற்கணிதங்களின் பலவீனமான தன்னியக்கவியல் பற்றிய பிரதிநிதித்துவ தேற்ற ஆய்விற்காக ஆபிரகாம் கோட்சால் மேற்பார்வையில் பெற்றார்[4]:{{{3}}}

2009ஆம் ஆண்டில், முந்தைய இயக்குநரான டி. கிறிஸ்டின் ஸ்டீவன்ஸ் பதவி விலகிய போது, இவர் ப்ராஜெக்ட் நெக்ஸ்ட்டின் இயக்குநரானார். இந்த திட்டம் கணிதத்தில் புதிய முனைவர் பட்டங்களுக்கான வழிகாட்டுதலை வழங்குவதற்காக அமெரிக்காவின் கணித சங்கத்தின் முன்முயற்சியாகும்[5]:{{{3}}}

இக்கின்சு விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரான பில் இக்கின்சு என்பவரை மணந்தார். மேலும் இருவரும் கலிபோர்னியாவில் தங்கள் ஓய்வு நாட்களைக் கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்[6]:{{{3}}}

அங்கீகாரம்[தொகு]

இக்கின்சு 1995ஆம் ஆண்டு அமெரிக்காவின் கணிதவியல் சங்கத்திடமிருந்து, இளநிலை ஆராய்ச்சிக்கான தனது பங்களிப்புகளுக்காக ஒரு சிறந்த ஆசிரியர் விருதை வென்றார்.[1]:{{{3}}} 2005ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கணிதவியல் சங்கத்தின் புகழ்பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழக கணிதக் கற்பித்தலுக்கான டெபோரா மற்றும் பிராங்க்ளின் கைமோ விருதை வென்ற மூன்று பேரில் இவரும் ஒருவர்.[7]:{{{3}}}

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Aparna Higgins, Ohio Section of the Mathematical Association of America, பார்க்கப்பட்ட நாள் 2018-02-17
  2. 2.0 2.1 Morning speaker, Pacific Coast Undergraduate Mathematics Conference, March 14, 2009, பார்க்கப்பட்ட நாள் 2018-02-17
  3. "Aparna Higgins", College of Arts and Sciences Directory, University of Dayton, பார்க்கப்பட்ட நாள் 2018-02-17
  4. கணித மரபியல் திட்டத்தில் அபர்ணா இக்கின்சு
  5. "Aparna Higgins to Become Director of Project NExT" (PDF), MAA Focus, Mathematical Association of America: 15, February–March 2009
  6. "Married math professors join the CLU community for one year", The Echo, California Lutheran University, February 24, 2016, பார்க்கப்பட்ட நாள் 2018-02-17
  7. "MAA Prizes Presented in Atlanta" (PDF), Notices of the American Mathematical Society, 52 (5): 543–544, May 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபர்ணா_இக்கின்சு&oldid=3888426" இலிருந்து மீள்விக்கப்பட்டது